சீனாவின் பெய்ஜிங் நகரில் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் 10 மீ ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் திவ்யன்ஷ் பன்வார் பங்கேற்றார்.
அதில், 249 புள்ளிகள் பெற்ற திவ்யன்ஷ் பன்வார், வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மேலும், இந்தத் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளதால் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த வெற்றிக்கு இந்திய ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.