ETV Bharat / sports

DC vs MI: தொடர் தோல்வி முகம்-முதல் வெற்றியை ருசிக்கப் போவது யார்?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காததால், இன்றைய போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் இருக்கும் இவ்விரு அணிகளும் மீண்டு வருமா? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

mumbai Delhi
மும்பை டெல்லி
author img

By

Published : Apr 11, 2023, 6:53 AM IST

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரின் இன்றைய (ஏப்ரல் 11) 16வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. பெங்களூரு மற்றும் சென்னை அணிகளுடன் மோதிய மும்பை அணி, 2 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதேபோல் லக்னோ, டெல்லி, ராஜஸ்தான் அணிகளை எதிர்கொண்ட டெல்லி அணி, மூன்றிலும் தோல்வியை தழுவியது. புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களுக்கு தள்ளப்பட்டிருக்கும் இவ்விரு அணிகளும் இன்று மோத உள்ளன.

வார்னர் ஆறுதல்: டெல்லி அணி இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களிலும் தொடக்கம் சரியாக அமையவில்லை. ப்ரித்வி ஷா ஃபார்மை இழந்து தவித்து வருவதால் அவரால் நிலைத்து நின்று விளையாட முடியவில்லை. கேப்டன் டேவிட் வார்னர் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடுகிறார். கடந்த 3 ஆட்டங்களில் அவர் இரண்டு போட்டிகளில் அரைசதம் விளாசி 158 ரன்கள் எடுத்து ஆறுதல் தருகிறார்.

நடுவரிசை ஆட்டக்காரர்களான மணீஷ் பாண்டே, ரோசோவ், ரோவ்மன் பாவெல், லலித் யாதவ் ஆகியோர் சொல்லும்படி விளையாடவில்லை. முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட்-க்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள அபிஷேக் போரெல், திறமையை நிரூபிக்க தவறுகிறார்.

ஒட்டுமொத்த அணியும் நிலைமையை உணர்ந்து விளையாடினால் தான், மும்பை அணிக்கு நெருக்கடி தர முடியும். கலீல் அகமது இன்றைய போட்டியில் களம் இறங்குவது சந்தேகம் என கூறப்படுகிறது. அதிரடி வீரர் மிட்செல் மார்ஷ் திருமணத்துக்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருப்பதால் அவரும் இன்றைய ஆட்டத்தில் இடம்பெறவில்லை. இது டெல்லி அணிக்கு பின்னடைவாகவே உள்ளது.

பந்துவீச்சை பொறுத்தவரை சேட்டன் சக்காரியா, குல்தீப் யாதவ், ஆன்ரிச் நர்ட்ஜே, முகேஷ் குமார் ஆகியோர், சிறப்பான பங்களிப்பை கொடுத்தால் மட்டுமே, மும்பை அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தலாம். எனினும் டெல்லி அணி இன்று சொந்த மண்ணில் களம் இறங்குவது அந்த அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

மும்பை அணி எப்படி?: மும்பை அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் இன்னும் முன்னேற்றம் காணப்பட வேண்டும். திலக் வர்மாவின் ஆட்டம் மட்டுமே சொல்லும்படியாக இருக்கிறது. 2 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர், 106 ரன்கள் எடுத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா, விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ரன் சேர்க்க தடுமாறுகின்றனர். அணியின் மூத்த வீரர்கள் முன்னேற வேண்டும் என விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார் கேப்டன் ரோஹித்.

ரூ.17.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள கேமரூன் க்ரீனின் ஆட்டம் மெச்சும்படி இல்லை. அவர் இரண்டு ஆட்டங்களில் வெறும் 17 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் கடந்த இரண்டு ஆட்டங்களிலும் ஜொலிக்கவில்லை. ஸ்டப்ஸ், டிம் டேவிட் ஆகிய நடுவரிசை வீரர்கள் நிலைமையை உணர்ந்து விளையாடினால் தான், ரன் குவிக்க முடியும்.

வருவாரா ஆர்ச்சர்?: பந்துவீச்சில் இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் காயத்தால் அவதிக்குள்ளாகியுள்ளார். அவர் இன்றைய போட்டியில் களம் இறங்குவாரா என உறுதியாக தெரியவில்லை. பியூஷ் சாவ்லா, ஷோகீன், குமார் கார்த்திகேயா, பெஹ்ரென்டார்ஃப், சந்தீப் வாரியார் சிறப்பாக செயல்பட்டால், டெல்லி அணியை கட்டுப்படுத்தலாம்.

டெல்லியில் போட்டி: டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் தொடங்குகிறது.

இரு அணிகளும் இதுவரை: டெல்லி மற்றும் மும்பை அணிகள் இதுவரை ஐபிஎல் தொடரில் 32 ஆட்டங்களில் மோதியுள்ளன. மும்பை அணி 17 போட்டிகளிலும், டெல்லி அணி 15 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

டெல்லி உத்தேச அணி: வார்னர் (கேப்டன்), பிரித்வி ஷா, மணீஷ் பாண்டே, ரோசோவ், ரோவ்மன் பாவெல், லலித் யாதவ், அக்சர் படேல், அபிஷேக் பொரேல் (விக்கெட் கீப்பர்), சேட்டன் சக்காரியா, குல்தீப் யாதவ், ஆன்ரிச் நர்ட்ஜே.

மும்பை உத்தேச அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷண் (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், ஸ்டப்ஸ், டிம் டேவிட், பியூஷ் சாவ்லா, ஷோகீன், குமார் கார்த்திகேயா, பெஹ்ரென்டார்ஃப், சந்தீப் வாரியர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.