ETV Bharat / sports

விமான சேவை ரத்து; ஸ்பெயினில் தவிக்கும் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை! - டேக்மி சர்கார் ஸ்பெயின்

விமான சேவை இல்லாத காரணத்தால், ஸ்பானிஷ் டேபிள் டென்னிஸ் லீக் தொடரில் பங்கேற்பதற்காக ஸ்பெயினுக்கு சென்ற இந்திய வீராங்கனை டேக்மி சர்கார், தாயகம் திரும்ப முடியாமல் அந்நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

COVID-19: Indian paddler Takeme stuck in Spain, says she is fine

author img

By

Published : Mar 26, 2020, 11:57 PM IST

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை டேக்மி சர்கார். இவர் கடந்த மாதம் ஸ்பெயின் நாட்டில் நடைபெறவிருந்த ஸ்பானிஷ் டேபிள் டென்னிஸ் லீக் தொடரில் பங்கேற்பதற்காக மலாகாவிற்கு சென்றுள்ளார். இதையடுத்து, இவர் நேற்று இந்தியாவுக்கு திரும்பவிருந்ததால், விமானத்தில் முன்பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில், கரோனா வைரசால் இந்தியாவில் ஏப்ரல் 3 வரை அனைத்து சர்வதேச விமான சேவைகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இதனால், அவர் மலாகாவில் தஞ்சமடைந்துள்ளார். ஸ்பெயினில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், டேக்மி சர்கார் அங்கு பாதுகாப்பாக இருக்கிறாரா என்ற அச்சம் அவரது பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தான் பாதுகாப்பாக இருப்பதாகவும், தனக்கு மலாகா அணியினர் உணவுகளை வழங்கி ஆதரவு அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு இந்தியாவிலிருந்தும் ஆதரவு கிடைப்பதை நினைத்து மகிழ்ச்சியடைவதாகவும், தான் தாயகம் திரும்ப மே 11ஆம் தேதி டிக்கெட் பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

கரோனா வைரஸ் காரணமாக அவர் மலாகாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஸ்பெயின் நாட்டில் கரோனா வைரசால் இதுவரை 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் குறித்து நினைவுக்கூரும் சரத் கமல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.