ETV Bharat / sports

ஒற்றைக் கையால் 10 கிமீ கடலில் நீந்தி சாதனை படைத்த கல்லூரி மாணவன்! - 10 கிலோ மீட்டர்

நாகை: தனியார் கல்லூரி மாணவன் இரும்புச் சங்கிலியால் ஒற்றைக் கையை கட்டிக்கொண்டு மற்றொரு கையால் 10 கிலோ மீட்டர் தூரம் கடலில் நீந்தி உலக சாதனை முயற்சி மேற்கொண்டுவருகிறார்.

college student
author img

By

Published : Aug 22, 2019, 2:08 PM IST

நாகை மாவட்டம், கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சபரிநாதன், இவர் தனியார் கல்லூரியில் இளங்கலை பொறியியல் கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். சபரிநாதன் சிறுவயது முதலே நீச்சல் அடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டிவந்துள்ளார்.

2017ஆம் ஆண்டு கை, கால்களை இரும்புச் சங்கிலியால் பூட்டுப்போட்டுக் கொண்டு 5 கி.மீ. தூரத்தை இரண்டு மணி நேரம் 20 நிமிடம் 48 நொடிகளில் கடந்து சாதனை படைத்தார்.

சாதனைக்காக நீந்திவரும் கல்லூரி மாணவன்

இந்நிலையில், இந்தச் சாதனைகளை முறியடிக்கும் விதமாக இன்று, இரும்புச் சங்கிலியால் ஒற்றைக் கையை கட்டிக்கொண்டு வேளாங்கண்ணியிலிருந்து நாகைவரை 10 கி.மீ. தூரம் கடலில் நீந்த முடிவு செய்துள்ளார்.

அவரின் இந்த முயற்சியை பாராட்டும் விதமாக அங்கு கூடியிருந்த சுற்றுலாப் பயணிகளும் மீனவர்களும் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து கடலில் நீந்த தொடங்கிய சபரிநாதன் தற்போது வேளாங்கண்ணியிலிருந்து நீந்தி நாகை நோக்கி தன் சாதனை முயற்சியை மேற்கொண்டுவருகிறார்.

Intro:Body:கல்லூரி மாணவன் 1 கிலோ எடை கொண்ட இரும்பு சங்கிலியால் ஒற்றைக் கையை கட்டிக்கொண்டு மற்றொரு கையால் வேளாங்கண்ணியில் இருந்து நாகை வரை 10 கிலோ மீட்டர் தூரம் கடலில் நீந்தி உலக சாதனை முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

நாகை மாவட்டம், கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சபரிநாதன் தனியார் கல்லூரியில் பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சபரிநாதன் சிறுவயது முதலே நீச்சல் அடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

பயிற்றுநரிடம் சிறப்பு பயிற்சிகளை பெற்ற அந்த மாணவன்,கடந்த 2017 -ம் ஆண்டு மார்ச் 2- ம் தேதி,கை மற்றும் கால்களை இரும்பு சங்கிலியால் பூட்டுப் போட்டு பூட்டிக் கொண்டு, நாகூர் துறைமுகத்தில் இருந்து காலை 8 மணிக்கு நீச்சலடிக்க துவங்கியவர் நாகை துறைமுகத்தை,காலை 10.20 மணிக்கு,5 கி.மீ.,துாரத்தை,2 மணி நேரம் 20 நிமிடம் 48 நொடிகளில் கடந்து சாதனை படைத்தார்.

இந்நிலையில், இந்த சாதனைகளை முறியடிக்கும் விதமாக இரண்டாவது உலக சாதனை புரிந்ததற்காக இன்று மாணவன் சபரிநாதன் இரும்பு சங்கிலியால் ஒற்றைக் கையை கட்டிக்கொண்டு வேளாங்கண்ணியில் இருந்து நாகை வரை 10 கிலோ மீட்டர் தூரம் கடலில் நீந்த முடிவு செய்தார். அதன்படி இன்று காலை வேளாங்கண்ணி கடற்கரையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சபரிநாதன் தனது இடது கையை ஒரு கிலோ எடை கொண்ட இரும்பு சங்கிலியால் பூட்டு போட்டு கட்டிக் கொண்டு பின்னர் கடலில் மற்றொரு கையால் நீந்த தொடங்கினார். அவரின் இந்த முயற்சியை மெய்சிக்கும் விதமாக அங்கு கூடியிருந்த சுற்றுலா பயணிகளும், மீனவர்களும் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து கடலில் நீந்த தொடங்கிய சபரிநாதன் தற்போது வேளாங்கண்ணியில் இருந்து வங்க கடலில் நீந்தி நாகை நோக்கி தன் சாதனை முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.