எக்ஸ்ட்ரீம் ஈ கார் பந்தயத் தொடரின் தகுதிச்சுற்று சவுதி அரேபியாவிலுள்ள அல்-உலா நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் பங்கேற்றுள்ள ஜெர்மன் நாட்டு ரேஸ் வீராங்கனை கிளாடியா ஹர்ட்கன் சென்ற கார், போட்டியின் இடையே கட்டுப்பாட்டை இழந்து மண் தரையில் ஐந்து முறைக்கு சுழன்று விபத்துக்குள்ளானது.
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் கிளாடியாவுக்கு பெரிய காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. கார் சுழன்றபோது ஏற்பட்ட அதிர்ச்சியில் அவர் தனது நாக்கைக் கடித்துக் கொண்டதால் சிறிய காயம் மட்டும் அடைந்தார்.
இந்தப் விபத்துக்குப் பிறகு மீண்டும் உடனடியாக தனது ரேஸ் பயணத்தைத் தொடர்ந்து முடித்தார் 49 வயதாகும் கிளாடியா. இவர் தற்போது உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமான சாலைகளில் இல்லாமல் கரடுமுரடான பகுதிகளிலும், காடு, பணி சிகரங்கள், பாலைவனம் என மணல் மிகுந்த பகுதிகளிலும் நடைபெறும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற போட்டியாக எக்ஸ்ட்ரீம் ஈ கார் பந்தயத் தொடர் அமைந்துள்ளது.
இந்தக் கார் ரேஸ் போட்டிகளில் மின்சாரத்தில் இயங்கும் எஸ்யூவி வகைக் கார்கள் ரேஸ் வீரர், வீராங்கனைகளால் பயன்படுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: 90% மகிழ்ச்சி - முதல் ரேஸ் குறித்து மைக்கேல் ஷூமேக்கர் மகன் மிக் கருத்து