ETV Bharat / sports

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டி 2023: முதல் மூன்று இடத்தை தட்டி சென்ற இந்திய வீரர்கள்.. !

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 10:51 PM IST

Chennai Grand Masters Tournament 2023: கடந்த 15ஆம் தேதி சென்னை லீலா பேலஸில் தொடங்கி நடைபெற்று வந்த சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் கடைசி சுற்று இன்று (டிச.21) நடைபெற்றது.

chennai grand masters tournament 2023
chennai grand masters tournament 2023

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி கடந்த 15ஆம் தேதி சென்னை லீலா பேலஸில் தொடங்கி நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் உலக கிராண்ட் மாஸ்டர்கள் 8 பேர் கலந்து கொண்டு விளையாடினர்.

மொத்தம் 7 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில், நேற்றுடன் (டிச.20) 6 சுற்றுகள் நிறைவடைந்தது. இந்த நிலையில், இதன் 7வது மற்றும் கடைசி சுற்று இன்று (டிச.21) நடைபெற்றது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான குகேஷ் - ஹரிகிருஷ்ணா மோதிய போட்டி, 31வது நகர்வில் டிராவில் முடிந்தது.

அதேபோல் பாவெல் எல்ஜனோவ் - லெவோன் அரோனியன் ஆட்டமும் டிராவில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து அர்ஜுன் எரிகைசி - சனான் சுகிரோவ் இடைய நடைபெற்ற ஆட்டத்தில், 57வது நகர்வில் அர்ஜீன் எரிகைசியும், அலெக்சாண்டர் ப்ரெட்கே - பர்ஹாம் மக்சூட்லூ இடைய நடைபெற்ற போட்டியில் 22-ஆவது நகர்வி பர்ஹாம் மக்சூட்லூவும் வெற்றி பெற்றனர்.

இறுதிச் சுற்றின் முடிவில் குகேஷ் மற்றும் அரிஜூன் எரிகைசி தலா 4.5 புள்ளிகளுடன் முறையே முதல் இடத்திலும், 2வது இடத்திலும் உள்ளனர். அதனைத் தொடர்ந்து 4 புள்ளிகளுடன் ஹரிகிருஷ்ணா 3வது இடத்திலும், பாவெல் எல்ஜனோவ் 4-புள்ளிகளுடன் 5-ஆவது இடத்திலும், லெவோன் அரோனியன், பர்ஹாம் மக்சூட்லூ ஆகிய இருவரும் தலா 3.5 புள்ளிகளுடன் முறையே 5 மற்றும் 6ஆவது இடத்திலும் உள்ளனர்.

கடைசி இரண்டு இடங்களில், சனான் சுகிரோவ் 2.5 புள்ளிகளுடன், அலெக்சாண்டர் ப்ரெட்கே 1.5 புள்ளிகளுடன் உள்ளனர். இந்தப் போட்டியில் டி.குகேஷ் 4.5/7 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். அர்ஜுன் எரிகைசியும் 4.5/7 என்ற புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தார். ஆனால் டை-பிரேக்கில் குகேஷ், அர்ஜுனை வெற்றி பெற்றார்.

மேலும், இந்த போட்டி தொடரின் குகேஷின் வெற்றியானது ஃபைட் சர்க்யூட்டில் முன்னணியில் வைப்பதோடு, கேண்டிடேட்ஸ் போட்டிக்கான தகுதி வாய்ப்புகளைப் பெரிதும் ஏற்படுத்தி உள்ளது. டிசம்பர் 25-31 வரை உஸ்பெகிஸ்தான் நாட்டில் சமர்கண்டில் நகரத்தில் நடைபெறும் உலக ரேபிட் & சாம்பியன்ஷிப்புடன் ஃபைட் சர்க்யூட் போட்டி முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சதம் விளாசிய சஞ்சு சாம்சன்.. தென் ஆப்பிரிக்கா அணிக்கு 297 ரன்கள் இலக்கு.. !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.