ஆடவர் உலகக்கோப்பை கைப்பந்து தொடர் ஜப்பான் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற எட்டாவது சுற்று ஆட்டத்தில் பலம் பொருந்திய பிரேசில் அணியை எதிர்த்து துனிசியா ஆடியது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே தனது ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரேசில் அணி முதல் செட்டை 25-17 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அதனைத்தொடர்ந்து தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரேசில் அணி இரண்டாவது செட்டை 25-14 எனவும், மூன்றாவது செட்டை 25-15 என்ற கணக்கிலும் கைப்பற்றி துனிசியாவை எளிதாக வீழ்த்தியது.
இதன்மூலம் உலகக்கோப்பை தொடரின் எட்டாவது சுற்று ஆட்டத்தில் பிரேசில் அணி 3-0 என்ற கணக்கில் துனிசியா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பிரேசில் அணி நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் எட்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 24 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இதையும் படிங்க:#FIVBWorldcup: 'ஈவு இரக்கமே இல்லையாடா உங்களுக்கு' - செர்பியாவையும் அதிரடியாக வென்ற சீனா!