ETV Bharat / sports

விஜேந்திர சிங்கின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த லோப்சன்! - புரோ சர்க்யூட்

தொடர்ந்து 12 முறை தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் வெற்றிவாகை சூடிய இந்தியாவின் விஜேந்திர சிங்கை ரஷ்யாவின் ஆர்டிஷ் லோப்சன் வீழ்த்தினார்.

Boxer Vijender Singh's 12-game winning streak ends in pro circuit

author img

By

Published : Mar 20, 2021, 9:54 AM IST

இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீரராக வலம்வந்தவர் விஜேந்திர சிங். இவர் 2008ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்காக வெண்கலப்பதக்கம் வென்றவர். இதன்மூலம் ஒலிம்பிக் குத்துச்சண்டைப் பிரிவில் இந்தியாவிற்காகப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

பின்னர் 2015ஆம் ஆண்டுமுதல் தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்றுவரும் விஜேந்திர சிங், கோவாவில் நடைபெற்ற புரோ சர்க்யூட் போட்டியில் ரஷ்யாவின் ஆர்டிஷ் லோப்சனிடம் தோல்வியடைந்தார்.

இதன்மூலம் தொழில்முறை குத்துச்சண்டையில் தொடர்ச்சியாக 12 முறை வெற்றியைப் பெற்று சாதனைப் படைத்திருந்த விஜேந்திர சிங், முதல்முறையாகத் தோல்வியடைந்துள்ளார்.

முன்னதாக ஏழு முறை தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டியின் நாக்அவுட் சுற்றில் வெற்றிபெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை விஜேந்திர சிங் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முதல் டி20 போட்டியிலிருந்து ஹர்மன்பிரீத் விலகல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.