ஹாங்சோ: 19வது ஆசிய விளையாட்டு தொடர் சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த மாதம் 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா - ஜப்பான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
ஆசிய விளையாட்டு தொடரின் 14வது நாளான இன்று (அக். 7) இந்தியா - ஜப்பான் அணிகளுக்கு இடையே விறுவிறுப்பாக இந்த போட்டியானது நடைபெற்றது. ஆட்டத்தின் முதல் 15 நிமிடங்களில் இந்திய வீராங்கனையான தீபிகா, பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். அதனை தொடர்ந்து இரண்டாவது 15 நிமிடத்தின் கடைசி நேரத்தில் ஜப்பான் வீராங்கனையான யூரி நாகாய் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார்.
-
#Bronze🥉for our Hockey Girls!
— SAI Media (@Media_SAI) October 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
A slender 2⃣-1⃣ victory in the bronze medal match against 🇯🇵 at the #AsianGames2022 🥳
Well played Team 🇮🇳! Many congratulations to all of you
💪🏻👏👏#Cheer4India 🇮🇳#HallaBol#JeetegaBharat#BharatAtAG22 pic.twitter.com/DSH0uh6kc5
">#Bronze🥉for our Hockey Girls!
— SAI Media (@Media_SAI) October 7, 2023
A slender 2⃣-1⃣ victory in the bronze medal match against 🇯🇵 at the #AsianGames2022 🥳
Well played Team 🇮🇳! Many congratulations to all of you
💪🏻👏👏#Cheer4India 🇮🇳#HallaBol#JeetegaBharat#BharatAtAG22 pic.twitter.com/DSH0uh6kc5#Bronze🥉for our Hockey Girls!
— SAI Media (@Media_SAI) October 7, 2023
A slender 2⃣-1⃣ victory in the bronze medal match against 🇯🇵 at the #AsianGames2022 🥳
Well played Team 🇮🇳! Many congratulations to all of you
💪🏻👏👏#Cheer4India 🇮🇳#HallaBol#JeetegaBharat#BharatAtAG22 pic.twitter.com/DSH0uh6kc5
நான்காவது 15 நிமிடங்கள் வரை இரு அணி வீராங்கனைகளும், தலா ஒரு புள்ளி பெற்று சமமாக இருந்த நிலையில், இந்திய அணியின் சுசீலா சானு கடைசியாக கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி கோல் அடித்து அசத்தினார். வெண்கலப் பதக்கத்திற்காக மோதி கொண்ட ஆட்டத்தில் ஜப்பான் அணியை 2 - 1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வென்றது.
சவிதா புனியா தலைமையிலான இந்திய மகளிர் ஹாக்கி அணி ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்றது அசத்தியது. இந்த பதக்கத்தையும் சேர்த்து இந்தியா வென்ற 41வது வெண்கலப் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக இந்திய அணி 104 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: Asian Games 2023: ஆடவருக்கான கபடியில் இந்திய அணி தங்கம்! நடப்பு சாம்பியன் ஈரானை ஊதித்தள்ளியது!