ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷி போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில், ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவு போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அமித் பங்கலும், கஜகஸ்தானின் சகேன் பிபோசினோவ்-வும் மோதினர். ஆரம்பம் முதலே ஆளுமை செலுத்தி வந்த அமித் பங்கல், கேம்மை 5–0 என்ற கணக்கில் தோற்கடித்து, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
இவர் 2017இல் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 2 பதக்கமும், 2019இல் தங்கமும் வென்றுள்ளார்.
மேலும், பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில், 6 முறை உலக சாம்பியனான இந்தியாவின் மேரிகோம் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அதே போல 54 கிலோ பிரிவின் அரையிறுதியில் இந்திய வீராங்கனை சாக்ஷி 3-2 என்ற கணக்கில் கஜகஸ்தானின் டினா ஜோலாமானை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.