ETV Bharat / sports

ஹாக்கி: ஜெர்மனியைப் பந்தாடியது இந்தியா!

இந்தியா - ஜெர்மனி அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்திய அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

Vivek Sagar Prasad scores brace as India thrash Germany 6-1

author img

By

Published : Feb 28, 2021, 11:48 PM IST

கரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு சர்வதேச சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஹாக்கி அணி, ஜெர்மனி அணியுடன் நான்கு போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரில் விளையாடிவருகிறது.

இதில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஆரம்பம் முதலே இந்திய அணி வீரர்கள் தங்களது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் நீலகண்ட சர்மா ஆட்டத்தின் 13ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடக்கி வைத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஜெர்மனி அணியின் கான்ஸ்டான்டின் ஸ்டைப் 14ஆவது நிமிடத்தில் கோலடித்து ஆட்டத்தில் சமநிலையை உண்டாக்கினார்.

அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விவேக் சாகர் ஆட்டத்தின் 27ஆவது நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.

இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் அபார ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணிக்கு, லலித் ஆட்டத்தின் 41ஆவது நிமிடத்திலும், ஆகாஷ்தீப் சிங் ஆட்டத்தின் 42ஆவது நிமிடத்திலும், ஹர்மன்பிரீத் சிங் ஆட்டத்தின் 47ஆவது நிமிடத்திலும் அடுத்தடுத்த கோல்களை அடித்து அசத்தினர்.

  • Give it up for today's goal scorers! 🏑🙌

    Nilakanta Sharma 13'
    Vivek Sagar 27' 27'
    Lalit Upadhyay 41'
    Akashdeep Singh 42'
    Harmanpreet Singh 47' pic.twitter.com/OhibXQen7m

    — Hockey India (@TheHockeyIndia) February 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இறுதிவரை போராடிய ஜெர்மனி அணியால் இந்திய அணியின் டிஃபென்ஸைத் தாண்டி கோலடிக்க முடியவில்லை. இதன் மூலம் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஹாக்கி போட்டி மார்ச் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூர் ஓபன்: சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் போபிரின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.