ETV Bharat / sports

மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பாலின் கதை! - இந்திய மகளிர் ஹாக்கி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ரயில்வே துறையில் டிக்கெட் கலெக்ட்ராக இருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தற்போதைய கேப்டன் ராணி ராம்பாலும் ரயில்வே துறை கிளார்க்காக வேலை பார்த்தவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்பது கேள்விக் குறியே.

story-of-rani-rampal-the-golden-girl-of-indian-hockey

author img

By

Published : Mar 4, 2020, 5:27 PM IST

இந்திய மகளிர் ஹாக்கி அணி 36 வருடங்களுக்குப் பிறகு 2ஆவது முறையாக ஒலிம்பிக் தொடருக்கு தகுதிப்பெற்றது. அதற்கு முழு முதற்காரணம் கேப்டன் ராணி ராம்பால். இந்தியாவில் ஹாக்கி அணிக்காக ஆடிய வீரர்களின் 10 பெயர்களைக் சொல்லசொன்னால் தியான் சந்த், தன்ராஜ் பிள்ளை, உத்தம் சிங், ரூப் சிங், முகமது ஷாகித் என சில பெயர்கள் வரும்.

ஆனால், அந்தப் பெயர்களில் ஒரு மகளிர் வீராங்கனைகளின் பெயர் ஒன்று கூட பொதுமக்களுக்கு தெரியாது. அந்த ஜாம்பவான் பெயர்களோடு மகளிர் ஹாக்கியின் சரித்திரத்தில் ராணி ராம்பாலின் பெயரையும் இணைக்கப்போக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் பயணம்
மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பாலின் பயணம்.

துல்லியத்திற்கும், ஆக்ரோஷத்திற்கும் பெயர்போன ராணி ராம்பால் தனது ஹாக்கி வாழ்க்கையைத் தொடங்கியது ஹரியானாவில். வண்டி இழுப்பவரின் மகளான ராணி ராம்பாலுக்கு, 6 வயதின்போது ஹாக்கி ஆசை வந்தது. ஆனால் பெற்றோருக்கு ஹாக்கி விளையாட்டைப் பற்றி முழுமையாக புரியவைப்பதற்கு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்குள் பெற்றோரை எதிர்த்து ராணி தனது எதிர்காலத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கிவிட்டார்.

அவரது பயணத்தில் மிகவும் முக்கியமானவர் முன்னாள் ஹாக்கி வீரரும் பயிற்சியாளருமான பல்தேவ் சிங். அவரின் வழிக்காட்டலிலும், ராணியின் உழைப்பாலும் 14 வயதில் தேசிய அணியில் இடம்பிடித்தார். ஆம், நீங்கள் படிப்பது சரியே. இந்திய மகளிர் அணியில் 14 வயதில் இடம்பிடித்த ஒரே வீராங்கனை ராணி ராம்பால் மட்டுமே.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ரயில்வே துறையில் டிக்கெட் கலெக்ட்ராக இருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தற்போதைய கேப்டன் ராணி ராம்பாலும் ரயில்வே துறை கிளார்க்காக வேலை பார்த்தவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்பது கேள்விக் குறியே.

கடந்த 2009ஆம் ஆண்டின்போது இந்திய அணியில் இடம்பிடித்த ராணி ராம்பால் தனது அபாரமான ஆட்டத்தால் சர்வதேச கவனத்தை ஈர்த்தவர். அந்த ஆண்டில் நடந்த ஆசியக் கோப்பையில் வெள்ளிப்பதக்கம் வெல்வதற்கு முக்கியமான காரணம் ராணி மட்டுமே.

முன்னணியில் இருந்து ஆடிய ராணியின் துல்லியம் அந்தத் தொடரில் யாருக்கும் வாய்க்கவேயில்லை. அதன்பின்னர் 2010ஆம் ஆண்டில் மகளிருக்கான உலகக்கோப்பை ஹாக்கித் தொடரில் பங்கேற்ற இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆனால் பெரிதாக சோபிக்க முடியவில்லை.

தொடர்ந்து இந்திய அணிக்காக பல போட்டிகளில் ஆடிய ராணியின் ஆட்டத்தால் இந்திய மகளிர் ஹாக்கி அணி வேகமாக வளரத்தொடங்கியது. சீனியர் அணியில் ஆடினாலும், 2013ஆம் ஆண்டு நடந்த ஜுனியர் உலகக்கோப்பைத் தொடரில் தொடர் நாயகிக்கான விருதினை பெற்று அசத்தினார்.

அந்தத் தொடரில் அதுநாள் வரை பதக்கம் வெல்லாத இந்திய அணி, ராணி ராம்பாலால் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது. அதன்பின் இந்திய அணி பங்கேற்ற ஆசியக் கோப்பைத் தொடர்களில் பதக்கத்துடனே தாயகத்திற்கு திரும்பினர்.

இவரின் அசாத்தியமான ஆட்டத்தால் 36 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக் தொடருக்கு தகுதிபெற்றது. ஆனால் ஒலிம்பிக் தொடரில் சரிவர ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாததால் மீண்டும் சோதனையை சந்தித்தது.

இந்த மூன்று ஆண்டுகளில் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள். புதிய வீராங்கனைகள், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம், நியூசிலாந்து, இங்கிலாந்து என சர்வதேச அணிகளில், இந்திய அணி வெல்கிறது. இதற்கெல்லாம் ராணியின் கேப்டன்சியும், கள வியூகமுமே காரணம்.

மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக் தொடரில் பங்கேற்குமா என கேட்டவர்கள், இன்று மகளிர் ஹாக்கி நிச்சயம் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் என நம்பிக்கையாக பேசத் தொடங்கியுள்ளனர். இதுவரை இந்திய அணிக்காக 200 போட்டிகளில் பங்கேற்றுள்ள ராணி ராம்பால், 134 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.

மகளிர் ஹாக்கியில் செய்த சாதனைகளுக்காக, 2016ஆம் ஆண்டில் இந்திய அரசு ராணிக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்தது. இந்த ஆண்டு மத்திய அரசால் வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை வாங்கிய ஆறு விளையாட்டு வீரர்களில் ராணியும் ஒருவர்.

இந்தியாவில் மகளிர் ஹாக்கி வீரர்களுக்கு மிகப்பெரிய உத்வேகம் அளிக்கும் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கலாம்.

இதையும் படிங்க: கடமை தவறாத கால்பந்து வீரர் விஜயனின் பிறந்தநாள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.