ETV Bharat / sports

பயிற்சிக்கு திரும்பிய ஹாக்கி வீரர்கள்! - ஹாக்கி வீரர்கள்

லக்னோ: மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி 250க்கும் அதிகமான ஹாக்கி வீரர்கள் (15-21 வயதுக்குட்பட்ட) இன்று பயிற்சிக்கு திரும்பினர்.

Over 250 hockey players resume sports activities in Uttar Pradesh
Over 250 hockey players resume sports activities in Uttar PradeshOver 250 hockey players resume sports activities in Uttar Pradesh
author img

By

Published : Oct 28, 2020, 7:47 PM IST

கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வைரஸின் தக்கம் கட்டுப்படுத்தப்பட்டு வருவதால், விளையாட்டு வீரர்கள் தங்களது பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி, 250க்கும் அதிகமான 15-21 வயதுகுட்பட்ட ஹாக்கி வீரர்கள் உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் அமைந்துள்ள ஹாக்கி விளையாட்டு அரங்கில் தங்களது பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து உ.பி., ஹாக்கி கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஆர்.பி.சிங் கூறுகையில், “கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு ஹாக்கி வீரர்கள் பயிற்சிக்குத் திரும்பியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வீரர்கள் தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் வீரர்கள் பயிற்சிக்கு திரும்புவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்” என்றார்.

இதையும் படிங்க: இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஜூனியர் ஹாக்கி அணியில் தமிழ்நாடு வீரர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.