கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஓராண்டாக எந்தவித சர்வதேச போட்டிகளிலும் இந்திய மகளிர் ஹாக்கி அணி பங்கேற்காமல் இருந்தது. பின்னர் வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கு அரசு அனுமதியளித்ததைத் தொடர்ந்து, பெங்களூருவிலுள்ள தேசிய விளையாட்டு பயிற்சி பள்ளியில் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.
மேலும் இந்தாண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை கருத்தில் கொண்டு, இந்த அணி சர்வதேச சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தது. அதன்படி அர்ஜென்டினா சென்றுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி, அந்நாட்டின் ஜூனியர் அணிகளுடன் விளையாடி வருகிறது.
இதில் நேற்று (ஜன.18) நடைபெற்ற ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணிகளும் வலிமையான டிஃபென்ஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் ஷர்மிளா தேவி கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அர்ஜென்டினாவின் பவுலா சாந்தமரினா ஆட்டத்தின் 28ஆவது நிமிடத்தில் கோலடித்தார். அதன்பின் ஆட்டத்தின் 31ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் தீப் கிரேஸ் எக்கா கோலடித்து அணிக்கு உதவினார்.
-
Here are some exclusive images from this morning’s #INDvARG encounter that ended in a 2-2 draw. 😍
— Hockey India (@TheHockeyIndia) January 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Full Album: https://t.co/MxeSi4HzRy #IndiaKaGame pic.twitter.com/HWXLeWAOuM
">Here are some exclusive images from this morning’s #INDvARG encounter that ended in a 2-2 draw. 😍
— Hockey India (@TheHockeyIndia) January 18, 2021
Full Album: https://t.co/MxeSi4HzRy #IndiaKaGame pic.twitter.com/HWXLeWAOuMHere are some exclusive images from this morning’s #INDvARG encounter that ended in a 2-2 draw. 😍
— Hockey India (@TheHockeyIndia) January 18, 2021
Full Album: https://t.co/MxeSi4HzRy #IndiaKaGame pic.twitter.com/HWXLeWAOuM
தொடர்ந்து பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின், 48ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் ப்ரிசா ப்ருகஸ்ஸர் கோலடித்து அணியை தோல்வியிலிருந்து மீட்டார். இதனால் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் இருந்ததால், ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஐஎஸ்எல்: டிராவில் முடிந்த சென்னை - ஈஸ்ட் பெங்கால் போட்டி