ETV Bharat / sports

#Johorcup: 'எங்க ஆட்டம் வெறித்தனம் தான்' - நியூசிலாந்தை திணறடித்த இந்தியா! - இந்திய அணியின் சஞ்சய்

ஜோஹர் பஹ்ரு: சுல்தான் ஆஃப் ஜோஹர் கோப்பை ஹாக்கி தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அண்டர்21 அணி 8 -2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வெளுத்து வாங்கியது.

#Johorcup
author img

By

Published : Oct 14, 2019, 8:06 AM IST

#Johorcup: 21 வயதுக்குட்பட்டோருக்கான ஹாக்கி அணிகளுக்கு இடையில் நடைபெறும் சுல்தான் ஆஃப் ஜோஹர் கோப்பை ஹாக்கித் தொடர் மலேசியாவின் ஜோஹர் பஹ்ரு நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அண்டர் 21 அணி நியூசிலாந்து அண்டர் 21 அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்திலேயே அதற்கான பலனை அனுபவித்தது.

இந்திய அணியின் தில்ப்ரீட் சிங் ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்தில் கோலடித்து அசத்த, அவரைத் தொடந்து 14ஆவது நிமிடத்தில் ஷிலனந்த் லக்ரா கோலடித்து வெறித்தனம் காட்டினார். அதன் பின்னர் இந்திய அணியின் சஞ்சய் ஆட்டத்தின் 17 மற்றும் 22 ஆவது நிமிடங்களில் தொடர்ந்து இரு கோல்களை அடித்து நியூசிலாந்து அணியின் டிஃபென்ஸை கேள்விக்குள்ளாக்கினார்.

அதன்பின் நடைபெற்ற ஆட்டத்திலும் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி மந்தீப் மோர், சுமன் பெக், பிரதாப் லக்ரா, சுதீப் ஷிர்மகோ ஆகியோரின் அடுத்தடுத்த கோல்களினால் நியூசிலாந்து அணியை வைத்து செய்தது.

இறுதி வரைப் போராடிய நியூசிலாந்து அணியால் இரண்டு கோல்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி சுல்தான் ஆஃப் ஜோஹர் கோப்பை ஹாக்கி தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் 8-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணியை பதம்பார்த்தது.

இதையும் படிங்க: #Johorcup: முதல் போட்டியிலேயே மலேசியாவை பந்தாடியது இந்தியா!

Intro:Body:

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.