கரோனா வைரஸுக்கு பிறகான உலகம் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அந்த உலகில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். குறிப்பாக, பரஸ்பரம் கை குலுக்குவது, பொது இடங்களில் அதிகமாக கூடுவது உள்ளிட்டவை பெரும்பாலும் தவிர்க்கப்படும்.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் தடுக்கும் நடவடிக்கையாக மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்திய விளையாட்டு வீரர்கள் தங்களது வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின் மீண்டும் ஹாக்கி போட்டிகளுக்கான பயிற்சி தொடங்கும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், குறித்து ஹாக்கி இந்தியா வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு:
- மீண்டும் பயிற்சி தொடங்கிய பிறகு வீரர், வீராங்கனைகள் அனைவரும் கட்டாயம் தங்களது மொபைலில் ஆரோக்கியா சேது செயலிலை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.
- 40x20 மீட்டர் பரப்பளவில் அதிகபட்சமாக நான்கு முதல் ஆறு வீரர்கள் மட்டுமே பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள்.
- ஆடுகளத்தை நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் மூன்று முதல் நான்கு வீரர்கள் தங்களுக்குள் ஒரு மீட்டர் இடைவெளியை பின்பற்றி பயிற்சி பெற பயன்படுத்திக்கொள்ளலாம்.
- அப்படி செய்வதன்மூலம் வீரர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு உதவும்.
- வீரர்களை தொட்டுப் பாராட்டும் செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- உடைகள் மாற்றும் அறைகள் மற்றும் குளியலறைகளின் பயன்பாட்டை வீரர், வீராங்கனைகள் குறைத்துக்கொள்ள வேண்டும்.
- பயிற்சிக்கு முழுமையாக தயாரான பின்னரே தங்களது கிட்களுடன் மைதானத்திற்கு வர வேண்டும்.
- மேலும் அவர்கள் தங்களது சொந்த துண்டுகள் (Towel) மற்றும் தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு வரவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பயிற்சிகளுக்கு இடையில் வீரர்கள் உடற்பயிற்சிக் கூட்டத்தில் அல்லது, நிச்சல்குளத்தில் பரஸ்பரம் குறைந்தது 1.5 மீட்டர் இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்.
- போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்னதாக அனைத்து வீரர், வீராங்கனைகள், ஊழியர்கள் 'ஆரோக்யா சேது' செயலி மூலம் தங்களது உடல்நிலையை ஆய்வு செய்ய வேண்டும். அதில், உடல்நிலையில் எந்தவித பிரச்னைகளும் இல்லை என்பது தெரிந்தால் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
ஊரடங்கால் ஆடவர், மகளிர் அணிகள் பெங்களூருவில் உள்ள விளையாட்டு வளாகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: