ETV Bharat / sports

ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு - Hockey India announces team for Olympic Qualifiers

டெல்லி: ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில் பங்கேற்கவுள்ள இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணியில் விளையாடவுள்ள வீரர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

Hockey
author img

By

Published : Oct 18, 2019, 11:47 PM IST

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்தாண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டியில் பங்கேற்கும் ஹாக்கி அணிகளுக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டுவருகிறது. இதற்கிடையே இந்திய ஹாக்கி அணிக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் இந்திய ஆடவர் அணி ரஷ்யாவை எதிர்த்தும் மகளிர் ஹாக்கி அணி அமெரிக்காவை எதிர்த்தும் விளையாடவுள்ளன. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இந்தப் போட்டிகள் நடைபெறும். இதில் வெற்றிபெறும் அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறும்.

இந்த தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கான இந்திய ஆடவர், மகளிர் அணியை இந்திய ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி மன்பிரீத் சிங் இந்திய ஆடவர் அணிக்கும் ராணி ராம்பால் மகளிர் அணிக்கும் தலைமை தாங்குவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஆடவர் அணி: பி.ஆர். ஸ்ரீஜெஸ், கிருஷண் பகதூர் பதாக், ஹர்மன்பிரீத் சிங், வருண் குமார், சுரேந்தர் குமார், குர்ரீந்தர் சிங், ருபிந்தர் பால் சிங், அமித் ரோஹிதாஸ், மான்பிரீத் சிங் (கேப்டன்), நீலகண்ட சர்மா, ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத், லலித் குமார் உபாத்யாய், எஸ்.வி. சுனில் (துணைக் கேப்டன்), மந்தீப் சிங், அக்ஷதீப் சிங், ராமன்தீப் சிங், சிம்ரன்ஜீத் சிங்.

Hockey
இந்திய மகளிர் ஹாக்கி அணி

இந்திய மகளிர் அணி: ராஜானி எடிமார்ப்பு, தீப் க்ரேஸ் எக்கா, குர்ஜித் கவுர், ரீனா கோக்கார், சலீமா டெட்டே, சுஷீலா சானு புக்ரம்பம், நிக்கி பிரதான், மோனிகா, நேகா கோயல், லிலிமா மின்ஸ், நமிதா டோப்போ, ராணி ராம்பால் (கேப்டன்), சவிதா (துணைக்கேப்டன்), வந்தனா கட்டாரியா, நவ்னீத் கவுர், லால்ரேம்சியாமி, நவ்ஜோத் கவுர், சர்மிளா தேவி.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான விதிமுறை:

இந்தத் தகுதிச் சுற்றில் இரண்டு போட்டிகளில் அணிகள் மோதுகின்றன. அதில் வெற்றிபெறும் அணிக்கு மூன்று புள்ளியும் போட்டி டிராவில் முடிவடைந்தால் ஒரு புள்ளியும் வழங்கப்படும். புள்ளிகள் அடிப்படையிலேயே அணிகளுக்கு ரேங்க் வழங்கப்படும்.

இரு அணிகளும் சமநிலை வகிக்கும் பட்சத்தில் அணிகளின் கோல் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதிலும் அணிகள் சமநிலை வகித்தால் பின்னர் ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்படும்.

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sports/hockey/hockey-india-names-mens-and-womens-team-for-olympic-qualifiers/na20191018191353681

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.