ETV Bharat / sports

போலீஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் அணிகள் வெளியேற உத்தரவு

அனைத்து இந்திய போலீஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து பஞ்சாப் போலீஸ், ஜம்மு-காஷ்மீர் போலீஸ் அணிகளை உடனடியாக வெளியேற்றும்படி அனைத்து இந்திய காவல்துறை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, இந்திய ஹாக்கி கூட்டமைப்பு உத்தரவிட்டுள்ளது.

ஹாக்கி போட்டி, hockey
ஹாக்கி போட்டி, hockey
author img

By

Published : Dec 22, 2019, 11:49 AM IST

இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காவல் துறை ஹாக்கி அணிகளுக்கு ஆண்டுதோறும் போட்டிகள் நடத்தப்பட்டுவருகிறது. இதனிடையே 68ஆவது அனைத்து இந்திய போலீஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒடிசாவின் புவனேஷ்வர் நகரில் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கியது. முதன்முறையாக ஒடிசா காவல் துறையினர் சார்பில் நடத்தப்படும் இந்த ஹாக்கி தொடரில் மொத்தம் 25க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன.

இதனிடையே இந்தத் தொடரில் பங்கேற்றுள்ள பஞ்சாப் போலீஸ், ஜம்மு காஷ்மீர் போலீஸ் அணிகளை வெளியேற்றக் கூறி அனைத்து இந்திய காவல்துறை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, இந்திய ஹாக்கி கூட்டமைப்பு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ஹாக்கி இந்தியாவின் ஒழுங்கு நடவடிக்கை குழு, இம்மாதத்தின் தொடக்கத்தில் அங்கீகரிக்கப்படாத தா பாலா ஹாக்கி தொடரில் கலந்துகொண்டதற்காக பஞ்சாப், ஜலந்தர், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட போலீஸ் அணிகளுக்கு அனைத்து விதமான ஹாக்கி போட்டிகளிலும் பங்கேற்க மூன்று மாதம் தடை விதித்தது.

இந்தத் தடையை எதிர்த்து பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய அணிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இரு அணிகளுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு இடைக்கால தடை விதித்த ஜம்மு நீதிமன்றம், தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கலாம் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ஹாக்கி இந்தியா தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், தற்காலிக தடையை நீக்குவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டெல்லியில் நடைபெற்ற நேரு கோப்பை ஹாக்கி தொடர் இறுதிப்போட்டியின்போது பஞ்சாப் போலீஸ் ஹாக்கி அணி வீரர்கள் சண்டையில் ஈடுபட்ட குற்றத்திற்காக அந்த அணிக்கு மேலும் மூன்று மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஹாக்கி இந்தியா தெரிவித்துள்ளது. தற்போது விதிக்கப்பட்டுள்ள தடையின் தொடர்ச்சியாக மார்ச் 10, 2020 முதல் ஜுன் 9, 2020 வரை இந்தத் தடைக்காலம் நீடிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிக் பேஷ் லீக்: 11 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்ற ஸ்கார்ச்சர்ஸ்!

Intro:Body:

aninews.in/news/sports/hockey/hockey-india-directs-aipscb-to-withdraw-punjab-police-j-k-police-teams-from-championship-201920191221231307/

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.