ETV Bharat / sports

மூத்த ஹாக்கி வீரர் கோபால் பெங்க்ரா மறைவு - ஹாக்கி இந்தியா இரங்கல்

டெல்லி: உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள மூத்த வீரர் கோபால் பெங்க்ரா மறைவுக்கு ஹாக்கி இந்தியா சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Hockey India
கோபால் பெங்க்ரா
author img

By

Published : Aug 11, 2021, 6:23 AM IST

ஜார்கண்ட மாநிலம், ராஞ்சியை சேர்ந்த கோபால் பெங்க்ரா (Gopal Bhengra) நீண்டநாளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவந்த நிலையில், கோபால் நேற்று (ஆக.10) காலாமானார். அவருக்கு வயது 75.

கோபால் பெங்காரா,1978ஆம் ஆண்டு அர்ஜென்டினாவில் நடைபெற்ற ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். அந்தத் தொடரில் அவர் பாகிஸ்தான், அர்ஜென்டினா அணிகளுடனான போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், அவர் இந்திய ராணுவத்திலும் பணியாற்றியுள்ளார்.

கோபால் பெங்க்ராவின் பங்களிப்பு

இந்நிலையில், ஹாக்கி இந்தியா தலைவர் ஞானேந்திர நிங்கோம்பம் (Gyanendro Ningombam) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கோபால் பெங்காராவின் குடும்பத்திற்கு ஹாக்கி இந்தியா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

1978ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் முக்கிய வீரரான கோபால் பெங்காரா, இந்திய ஹாக்கி அணிக்கு அவர் அளித்துள்ள பங்களிப்பால் நிச்சயம் நினைவுகூரப்படுவார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: EXCLUSIVE INTERVIEW: நாடே எங்களை வரவேற்றது போல் இருந்தது - கேப்டன் மன்பிரீத்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.