ETV Bharat / sports

நீண்ட நாள் காதலியைக் கரம் பிடித்த ஹாக்கி கேப்டன்! - Illi Siddique

இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங், தனது நீண்ட நாள் காதலியான மலேசியாவின் இல்லி சித்திக்கை சீக்கிய முறைப்படி இன்று திருமணம் செய்துகொண்டார்.

hockey-captain-manpreet-singh-marries-illi-siddique-in-jalandhar

author img

By

Published : Dec 16, 2020, 8:15 PM IST

இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக இருப்பவர் மன்பிரீத் சிங். இவர் கடந்த எட்டு ஆண்டுகளாக மலேசியாவைச் சேர்ந்த இல்லி சித்திக் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் அடுத்தாண்டு டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு முன்னதாக திருமணம் செய்துகொள்வதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் மன்பிரீத் சிங் - இல்லி சித்திக் இணை பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் தனது குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் சீக்கிய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். மேலும் மன்பிரீத் சிங்கின் குடும்பத்தினர் இல்லி சித்திக்கிற்கு ‘நவ்பிரீத் கவுர்' என்று பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீண்ட நாள் காதலியைக் கரம்பிடித்த ஹாக்கி கேப்டன்

இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக 2017ஆம் ஆண்டு மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், இவரது தலைமையில் இந்திய ஹாக்கி அணி களமிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘சீசனின் முதல் வெற்றிக்காக காத்திருக்கிறோம்’ - அர்ஷ்தீப் சிங்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.