ETV Bharat / sports

ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய முன்னாள் ஹாக்கி வீரர் உயிரிழப்பு! - Former India hockey player Balbir Singh Kullar dies

1968ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றிருந்த பல்பீர் சிங் குல்லார் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார்.

former-india-hockey-player-balbir-singh-kullar-dies

author img

By

Published : Mar 1, 2020, 10:01 PM IST

1968ஆம் ஆண்டு மெக்ஸிகோவில் நடந்த ஒலிம்பிக் தொடரில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அந்தத் தொடரில் இந்திய அணி பதக்கம் வெல்வதற்கு பல்பீர் சிங் குல்லார் முக்கியக் காரணமாக அமைந்தார்.

தற்போது 77 வயதாகும் பல்பீர் சிங் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்துவந்தார். பல்பீர் சிங் தனது மகனுடன் அமெரிக்காவுக்கு புறப்பட்டபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதையடுத்து வெள்ளிக்கிழமை ஜலந்தரில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார்.

  • We are deeply saddened by the demise of our former hockey player and a two-time Olympic medallist, Balbir Singh Kullar.

    We send out our heartfelt condolences to his family.#RIP pic.twitter.com/532WyFySYy

    — Hockey India (@TheHockeyIndia) March 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பல்பீர் சிங் 1963ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம்பிடித்து முன்னணி வீரராக வலம்வந்தவராவார். ஹாக்கியிலிருந்து ஓய்வுபெற்றபின், தேசிய அணியின் தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்தார்.

இதுகுறித்து இந்திய ஹாக்கி சம்மேளனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பல்பீர் சிங்கின் இறப்பிற்கு இரங்கலைத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: உணவகத்தில் சண்டை... ஹாக்கி வீரர் சுட்டுக்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.