எஃப்ஐஹெச் ப்ரோ லீக் ஹாக்கி தொடரின் அடுத்த போட்டியில் பிரிட்டன் - ஜெர்மணி அணிகள் ஆடுகின்றன. அதேபோல் மகளிர் தொடரில் சீனா - பெல்ஜியம் அணிகள் ஜனவரி மாதம் ஆடவுள்ளது.
ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வேச போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையால், சர்வதேச ஹாக்கி சம்மேளனத்திடம் ஜெர்மனி, பெல்ஜியம், சீனா ஆகிய நாடுகள் போட்டிகளை ஒத்திவைக்கக் கோரி கடிதம் அனுப்பின.
இதனைத்தொடர்ந்து எஃப்ஐஹெச் ப்ரோ லீக் ஹாக்கி போட்டிகளை ஒத்தி வைத்து சர்வதேச ஹாக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.
மேலும் கரோனா வைரஸ் சூழல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டவுடன் இப்போட்டிகளுக்கான புதிய தேதிகள் மீண்டும் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இதைப்பற்றி எஃப்ஐஹெச் தலைமைச் செயல் அலுவலர் தியரி வெய்ல் பேசுகையில், '' இதுபோன்ற கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது நிலவும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு விரைவில் போட்டிகளுக்கான புதிய தேதிகள் அறிவிக்கப்படும். உலகில் முழுவதும் கரோனா சூழல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட உடன் நிச்சயம் ஹாக்கி போட்டிகள் முழுமூச்சுடன் நடத்தப்படும் '' என்றார்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2020: 460 ரன்களில் 302 ரன்களை ஓடி எடுத்த விராட் கோலி!