ETV Bharat / sports

கரோனா முன்னெச்சரிக்கை: 5 வீரர்களைத் தனிமைப்படுத்திய மான்செஸ்டர் சிட்டி! - இங்கிலீஷ் பிரீமியர் லீக்

கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபருடன் தொடர்பிலிருந்து ஐந்து வீரர்களைத் தனிமைப்படுத்தியுள்ளதாக மான்செஸ்டர் சிட்டி அணியின் மேலாளர் பெப் கார்டியோலா தெரிவித்துள்ளார்.

Watch: 5 Man City players isolating after contracting COVID-19

author img

By

Published : Jan 2, 2021, 4:00 PM IST

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறவுள்ள லீக் போட்டியில் செல்சி அணி - மான்செஸ்டர் சிட்டி அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இந்நிலையில் நேற்று (ஜன. 01) மான்செஸ்டர் சிட்டி அணியினருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையின் முடிவில், அணி ஊழியர்கள் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும் வீரர்களில் எவருக்கும் தொற்று உறுதிசெய்யப்படவில்லை.

இதையடுத்து கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்து ஐந்து வீரர்களைத் தனிமைப்படுத்தியுள்ளதாக மான்செஸ்டர் சிட்டி அணியின் மேலாளர் பாப் கார்டியோலா தெரிவித்துள்ளார்.

இதனால் நாளை நடைபெறும் செல்சி அணியுடனான போட்டியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மான்செஸ்டர் சிட்டி அணி வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் என்றும் அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:‘நடராஜன் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்; ஆனால் டெஸ்ட்டில் அது பலனளிக்குமா என்பது தெரியவில்லை’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.