ஸ்பெயினின் கால்பந்து கிளப் அணிகளான பார்சிலோனா, ரியல் மாட்ரிட், வலென்சியா, அத்லெடிக்கோ மாட்ரிக் உள்ளிட்ட நான்கு அணிகளுக்கு இடையிலான ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை தொடர் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இதன் அரையிறுதிப் போட்டிகளில் ரியல் மாட்ரிட் அணி 3-0 என வலேன்சியாவையும், அத்லெடிக்கோ மாட்ரிட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
ரியல் மாட்ரிட் - அத்லெடிக்கோ மாட்ரிட் அணிகளுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்கத் தவறியதால் இரு அணிகளுக்கும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், 115ஆவது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் நடுகள வீரர் ஃபெட்ரிகோ வால்வர்டே, அத்லெடிக்கோ மாட்ரிட் அணியின் ஸ்ட்ரைக்கர் மோரோடாவை ஃபவுல் செய்ததால் நடுவர் அவருக்கு ரெட் கார்ட் வழங்கினார்.
-
⚽🎯🤩 That @SergioRamos penalty that brought us the Spanish Super Cup title!#RMSuperCopa | #Supercampeones pic.twitter.com/PVf4Yg8wq6
— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) January 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">⚽🎯🤩 That @SergioRamos penalty that brought us the Spanish Super Cup title!#RMSuperCopa | #Supercampeones pic.twitter.com/PVf4Yg8wq6
— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) January 12, 2020⚽🎯🤩 That @SergioRamos penalty that brought us the Spanish Super Cup title!#RMSuperCopa | #Supercampeones pic.twitter.com/PVf4Yg8wq6
— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) January 12, 2020
இதையடுத்து, கூடுதலான நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டத்தின் வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி வழங்கப்பட்டது. இதில், 4-1 என்ற கணக்கில் அத்லெடிக்கோ மாட்ரிட் அணியை வீழ்த்தி ரியல் மாட்ரிட் அணி தனது 11ஆவது சூப்பர் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. அந்த அணி முன்னதாக, 1988, 1989, 1990, 1993, 1997, 2001, 2003, 2008, 2012, 2017 ஆகிய ஆண்டுகளில் சூப்பர் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.
பெனால்டி ஷுட் அவுட்டில், ரியல் மாட்ரிட் அணி முதல் நான்கு கிக்கையும் கோலாக மாற்றியது. ஆனால், அத்லெடிக்கோ மாட்ரிட் அணி தங்களது முதல் இரண்டு கிக்கையும் எடுத்த சவுல் நிகஸ், தாமஸ் பார்டி ஆகியோர் வீணடித்ததால், இப்போட்டியில் வெற்றிபெறும் வாய்ப்பை இழந்தது.
இதையும் படிங்க: உலக அதிசயத்தில் நடைபெற்ற அசத்தலான கால்பந்து போட்டி!