கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன் கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி - ஈஸ்ட் பெங்கால் அணியுடன் மோதியது.
பரபரப்பாக தொடங்கிய இப்போட்டியில் இரு அணி வீரர்களும் கோலடிக்கப் போராடினர். பின்னர் ஆட்டத்தின் 33ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் சுர்சந்த்ரா சிங் கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடக்கி வைத்தார்.
இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணியினரும் வலிமையான டிஃபென்ஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இருப்பினும் ஆட்டத்தில் கிடைத்த கூடுதல் நேரமான 90+1ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ரோச்சார்செலா கோலடித்து அணியின் வெற்றியை உறுதிபடுத்தினார். இறுதிவரை போராடிய ஈஸ்ட் பெங்கால் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
-
FT' | NOW YOU'RE GONNA BELIEVE US! 🔴⚪#NEUSCEB #StrongerAsOne pic.twitter.com/HvUA4XukKh
— NorthEast United FC (@NEUtdFC) December 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">FT' | NOW YOU'RE GONNA BELIEVE US! 🔴⚪#NEUSCEB #StrongerAsOne pic.twitter.com/HvUA4XukKh
— NorthEast United FC (@NEUtdFC) December 5, 2020FT' | NOW YOU'RE GONNA BELIEVE US! 🔴⚪#NEUSCEB #StrongerAsOne pic.twitter.com/HvUA4XukKh
— NorthEast United FC (@NEUtdFC) December 5, 2020
இதனால் ஆட்டநேர முடிவில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 8 புள்ளிகளுடன் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது.
இதையும் படிங்க:கோலி, பும்ரா இந்த சகாப்தத்தில் சிறந்தவர்கள் - பிரையன் லாரா