ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோவாவில் நடைபெற்றுவரும் ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன் கலைகட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி - ஜாம்ஷெட்பூர் அணியை எதிர்கொண்டது.
பரபரப்பாக தொடங்கிய இப்போட்டியில் இரு அணி வீரர்களும் கோலடிக்க போராடினர். ஆட்டத்தின் 24ஆவது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியின் யூஜெனேசன் லிங்டோ எதிரணியின் அலெக்ஸாண்ட்ரே லிமாவிடம் ஆட்டத்தின் விதிகளை மீறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக அவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.
இதனையடுத்து முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணியும் கோலேதுமின்றி சமநிலையில் இருந்தனர். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் இரு அணியினரும் வலிமையான டிஃபென்ஸை வெளிப்படுதினர். இதனால், கோலடிக்க முயற்சித்த இரு அணிகளின் அத்தனை யுக்திகளும் தவிடுபொடியானது.
இதைத்தொடர்ந்து ஆட்டத்தில் வழங்கப்பட்ட கூட்டுதல் நேரம் வழங்கப்பட்டது. இருப்பினும் ஆட்டநேர முடிவில் இரு அணியும் கேலேதும் அடிக்காமல் இருந்ததால் ஆட்டம் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆட்டத்தில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க ஏதுவாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்திற்போது விதிமுறைகளை மீறிய ஜாம்ஷெட்பூர் அணியின் ரென்ட்லீக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.
இதன் மூலம் இந்த சீசனில் அறிமுகமான ஈஸ்ட் பெங்கால் அணி தனது முதல் புள்ளியைப் பெற்றது. ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் ஜாம்ஷெட்பூர் அணி 6 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது.
இதையும் படிங்க:ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் கோலி & ரோஹித்!