ETV Bharat / sports

பயிற்சியாளரைப் பார்த்து வாயை மூடு என்று சொன்ன மெஸ்ஸி..! - மெஸ்ஸி

அர்ஜென்டினா - பிரேசில் அணிகளுக்கு இடையிலான நட்பு ரிதீயிலான போட்டியின் போது மெஸ்ஸி தன்னைப் பார்த்து வாயை முடு என்று சொன்னதாக பிரேசில் அணியின் பயிற்சியாளர் டைட் தெரிவித்துள்ளார்.

messi-
author img

By

Published : Nov 17, 2019, 3:34 AM IST

அர்ஜென்டினா - பிரேசில் அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி சவுதி அரேபியாவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியின் மூலம், அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் மூன்று மாத தடைக்குப் பிறகு மீண்டும் அணிக்குத் திரும்பினார்.

முன்னதாக, கோபா அமெரிக்கா கால்பந்துத் தொடர், பிரேசில் அணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மேட்ச் ஃபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது என மெஸ்ஸி கருத்துத் தெரிவித்திருந்தார். மெஸ்ஸியின் ஊழல் குறித்த கருத்துக்கு கோபா அமெரிக்கா கால்பந்து கூட்டமைப்பு அவருக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் விதித்ததுள்ளது. இதுமட்டுமல்லாது, சர்வதேச போட்டிகளில் அடுத்த மூன்றுமாதத்திற்கு விளையாடவும் அவருக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தியது. 13ஆவது நிமிடத்தில் வழங்கப்பட்ட பெனால்டி முறை மூலம் மெஸ்ஸி கோல் அடித்தார்.

இதனிடையே, முதல் பாதியின் போது மெஸ்ஸி, பிரேசில் வீரர்களை ஃபவுல் செய்தார். இதை நடுவர் கண்டுகொள்ளததால், பிரேசில் அணியின் பயிற்சியாளர் டைட் (Tite) கோபமடைந்தார். இதையடுத்து, அவரை நோக்கி வாயை மூடு என மெஸ்ஸி தெரிவிக்க இருவருக்குள்ளே வாக்கு வாதம் ஏற்பட்டது.

messi-
பிரேசில் பயிற்சியாளர் டைட்

இது குறித்து பிரேசில் பயிற்சியாளர் டைட் கூறுகையில், "மெஸ்ஸி ஃபவுல் செய்ததால், அவருக்கு யெல்லோ கார்ட் தர வேண்டும் என நடுவரிடம் கூறினேன். அதற்கு மெஸ்ஸி என்னைப் பார்த்து வாயை மூடு என்று சொல்ல, நான் பதிலுக்கு நீ வாயை மூடு என்று சொன்னேன்.

இதற்கு மேல் அதைப் பற்றி நான் பதிலளிக்க விரும்பவில்லை. இதுபோன்ற போட்டியின் போது நடுவர்கள் சரியாக செயல்பட வேண்டும். இல்லை என்றால் அவர் நடுவர்களையும் தின்றுவிடுவார். அவருக்கு 'யெல்லோ கார்ட்' தந்திருக்க வேண்டும்" என்றார். மெஸ்ஸியின் இந்த நடவடிக்கை தொடர்ந்து, பிரேசில் அணியின் கேப்டன் தியாகோ சில்வாவும் கண்டம் தெரிவித்துள்ளார்.

Intro:Body:

Messi slams brazil coach 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.