ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து தொடரான லாலிகா கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் நேற்று (டிச.24) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பார்சிலோனா எஃப்சி அணி - வல்லாடோலிட் எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
பார்சிலோனா அபார வெற்றி
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதி ஆட்டத்தின் தொடக்கம் முதலே பார்சிலோனா அணி வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் பயணாக ஆட்டத்தின் 21ஆவது நிமிடத்தில் அந்த அணியின் லெங்கட் கோலடித்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து ஆட்டத்தின் 35ஆவது நிமிடத்தில் பிராத்வெயிட்டும் கோலடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் பார்சிலோனா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்ட பார்சிலோனா அணியின் மெஸ்ஸில் ஆட்டத்தின் 65ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இதன் மூலம் ஆட்டநேர முடிவில் பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வல்லாடோலிட் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
மெஸ்ஸி சாதனை
இப்போட்டியில் பார்சிலோனா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி கோலடித்ததன் மூலம், பார்சிலோனா அணிக்காக தனது 644ஆவது கோலை பதிவு செய்தார். இதனால் ஒரு கால்பந்து கிளப்பிற்காக விளையாடி அதிக கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
-
👑🥇 Leo #Messi devient le meilleur buteur de l'histoire en club et dépasse désormais @pele ! #ValladolidBarça (0-3) pic.twitter.com/YMXhDGJh4M
— FC Barcelona (@fcbarcelona_fra) December 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">👑🥇 Leo #Messi devient le meilleur buteur de l'histoire en club et dépasse désormais @pele ! #ValladolidBarça (0-3) pic.twitter.com/YMXhDGJh4M
— FC Barcelona (@fcbarcelona_fra) December 22, 2020👑🥇 Leo #Messi devient le meilleur buteur de l'histoire en club et dépasse désormais @pele ! #ValladolidBarça (0-3) pic.twitter.com/YMXhDGJh4M
— FC Barcelona (@fcbarcelona_fra) December 22, 2020
முன்னதாக சீரி ஏ தொடரின் சாண்டோஸ் எஃப்சி அணிக்காக விளையாடிய கால்பந்து ஜாம்பவான் பீலே, அந்த அணிக்காக 643 கோல்களை அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. இதனை தற்போது பார்சிலோனா அணியின் கேப்டன் மெஸ்ஸி முறியடித்துள்ளார்.
இதையும் படிங்க:ஐஎஸ்எல்: டிராவில் முடிந்த ஒடிசா - நார்த் ஈஸ்ட் ஆட்டம்!