ETV Bharat / sports

30 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின், பிரிமியர் லீக் கோப்பையைக் கைப்பற்றிய லிவர்பூல்!

லிவர்பூல்: 30 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிமியர் லீக் கோப்பையை லிவர்பூல் அணி வென்றுள்ளது.

liverpool-lifts-premier-league-trophy-on-kop

author img

By

Published : Jul 23, 2020, 3:04 PM IST

பிரீமியர் லீக் தொடர் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், 30 ஆண்டுகளுக்கு பிறகு லிவர்பூல் அணி கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. பிரீமியர் லீக் கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், கரோனா வைரஸ் காரணமாக தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பிரீமியர் லீக் தொடர் மீண்டும் நடக்குமா என்று ரசிகர்களிடையே என்ற கேள்வி எழுந்தது.

அதையடுத்து ரசிகர்களின்றி தொடரினை நடத்த அரசும், ஃபிபாவும் அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து நடந்த போட்டிகளில் லிவர்பூல் அணி கோப்பையைக் கைப்பற்றியது.

வழக்கமாக பிரீமியர் லீக் தொடரில், கடைசி ஆட்டம் வரையில் வெற்றியாளர் யார் என்பதில் கணிப்பு மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் இம்முறையோ லிவர்பூல் அணி எவ்வித கணிப்புகளுக்கும் இடம் கொடுக்காமல் 7 போட்டிகள் மீதமுள்ள நிலையிலேயே, கோப்பையை உறுதி செய்தது.

இந்நிலையில் நேற்றுடன் முடிவடைந்த பிரீமியர் லீக் தொடரில் லிவர்பூல் அணி வீரர்கள் தங்களது கோப்பையை பெற்றுக்கொண்டனர்.

பிரிமியர் லீக் கோப்பையைக் கைப்பற்றிய லிவர்பூல்

இதுகுறித்து லிவர்பூல் அணியின் பயிற்சியாளர் குர்ஜென் க்ளோப் பேசுகையில், '' ரசிகர்கள் இருந்தால் இந்த வெற்றி இன்னும் நன்றாக இருந்திருக்கும். கரோனா தொற்றை எப்போது கடந்து செல்வோம் என தெரியவில்லை. இந்த வெற்றி ஒருநாளில் கிடைத்துவிடவில்லை. இந்த நிமிடத்திற்காக அதிக சிரமங்களை சந்தித்திருக்கிறோம். வெற்றிப்பயணத்தை ஒரு சீசனோடு முடித்துக்கொள்ள விரும்பவில்லை. அடுத்த வருடம் மீண்டும் கோப்பையை வென்று ரசிகர்களுடன் வெற்றியைக் கொண்டாட வேண்டும்'' என்றார்.

இதையும் படிங்க: ஐபிஎல் விளையாடுவதில் மகிழ்ச்சி - கேன் வில்லியம்சன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.