LaLigaSantander: ஸ்பெயினில் இந்த சீசனுக்கான லா லிகா கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், இன்று நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி எய்பார் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
ஆட்டம் தொடங்கியது முதலே அதிரடி ஆட்டத்தை தொடங்கிய பார்சிலோனா ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்திலேயே கோலடித்து அசத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் வால்டோலிட் அணியின் கிகோ ஆட்டத்தின் 15ஆவது நிமிடத்தில் கோலடித்து போட்டியில் சமநிலையை உருவாக்கினார்.
-
Performance of the season so far? 🙇♂️#BarçaRealValladolid pic.twitter.com/3H2XkGRwfk
— LaLiga (@LaLigaEN) October 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Performance of the season so far? 🙇♂️#BarçaRealValladolid pic.twitter.com/3H2XkGRwfk
— LaLiga (@LaLigaEN) October 29, 2019Performance of the season so far? 🙇♂️#BarçaRealValladolid pic.twitter.com/3H2XkGRwfk
— LaLiga (@LaLigaEN) October 29, 2019
அதன்பின் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிபடுத்திய பார்சிலோனா அணிக்கு 29ஆவது நிமிடத்தில் விடல் மூலம் மேலும் ஒரு கோல் கிடைத்தது. அதன்பின் பார்சிலோனா அணியின் கேப்டன் மெஸ்ஸி ஆட்டத்தில் 34’ மற்றும் 75’ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்தி எதிரணியினர் மிரண்டு போயினர்.
அதோடுமட்டுமில்லாமல் ஆட்டத்தில் 77ஆவது நிமிடத்தில் லூயிஸ் மூலம் மேலும் ஒரு கோல் பார்சிலோனா அணிக்கு வந்துசேர்ந்தது. இதன் மூலம் ஆட்டநேர முடிவில் பார்சிலோனா அணி 5-1 என்ற கோல் கணக்கில் வல்லாடோலிட் அணியை விழ்த்தி தொடர்ச்சியாக லா லிகா தொடரில் ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.
-
💙🔝 @FCBarcelona 🔝❤️#LaLigaSantander pic.twitter.com/giNf1PRLdF
— LaLiga (@LaLigaEN) October 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">💙🔝 @FCBarcelona 🔝❤️#LaLigaSantander pic.twitter.com/giNf1PRLdF
— LaLiga (@LaLigaEN) October 29, 2019💙🔝 @FCBarcelona 🔝❤️#LaLigaSantander pic.twitter.com/giNf1PRLdF
— LaLiga (@LaLigaEN) October 29, 2019
இந்த வெற்றியின் மூலம் நடப்பு சாம்பியனான பார்சிலோனா அணி இந்தாண்டிற்கான லா லிகா தொடரில் ஐந்து வெற்றிகளைப்பெற்று 22 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் நீதித்து வருகின்றது.
இதையும் படிங்க: ஐ.எஸ்.எல். கால்பந்து: சொந்த ஊரில் வைத்து ஹைதராபாத்தை செய்த ஜாம்ஷெட்பூர்