இத்தாலியில் சீரி ஏ கால்பந்துத் தொடரை வென்ற அணிகளுக்கும், கோப்பா இத்தாலி பட்டம் வென்ற அணிகளுக்குமிடையே இத்தாலி சூப்பர் கோப்பை கால்பந்து தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், சவுதி அரபியோவின் ரியாத் நகரில் நடைபெற்ற இந்த சீசனுக்கான இத்தாலி சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியில் கடந்த சீசனில் சீரி ஏ சாம்பியனானா யுவென்டஸ் அணி, கோப்பா இத்தாலி பட்டம் வென்ற லாசியோ அணியை எதிர்கொண்டது.
நடப்பு சீரி ஏ சீசனில் யுவென்டஸ் அணி, லாசியோ அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்திருந்தது. இதனால், அந்தத் தோல்விக்கு யுவென்டஸ் அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் அந்த அணி ரசிகர்கள் இருந்தனர். ஆட்டத்தின் 16ஆவது நிமிடத்திலேயே லாசியோ வீரர் லூயிஸ் அல்பர்டோ கோல் அடித்து அணிக்கு முன்னிலைப் பெற்றுதந்தார். இதையடுத்து, 45ஆவது நிமிடத்தில் யுவென்டஸ் வீரர் டிபாலா கோல் அடிக்க முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் முடிவடைந்தது.
-
Congrats to @OfficialSSLazio for winning the #ItalianSuperCup. Great to host such a beautiful game in #Riyadh. 🇮🇹🇸🇦
— Slayman (@ActuallySlayman) December 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
pic.twitter.com/Gtme0P6iyK
">Congrats to @OfficialSSLazio for winning the #ItalianSuperCup. Great to host such a beautiful game in #Riyadh. 🇮🇹🇸🇦
— Slayman (@ActuallySlayman) December 22, 2019
pic.twitter.com/Gtme0P6iyKCongrats to @OfficialSSLazio for winning the #ItalianSuperCup. Great to host such a beautiful game in #Riyadh. 🇮🇹🇸🇦
— Slayman (@ActuallySlayman) December 22, 2019
pic.twitter.com/Gtme0P6iyK
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாம் பாதியில் லாசியோ அணியினர் தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்தி கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால், 73ஆவது நிமிடத்தில் லாசியோ வீரர் செனாட் லுசிக் கோல் அடித்து அசத்தினார். ரொனால்டோ, டிபாலா, கொன்சாலோ ஹிகுவைன் என நட்சத்திர ஃபார்வர்டு வீரர்கள் கொண்ட யுவென்டஸ் அணி இப்போட்டியில் கம்பேக் தரும் என எதிர்பார்க்கப்பட்டது.
-
🏆 Lazio is the champion of the #ItalianSuperCup pic.twitter.com/fg119Wv09i
— General Sports Authority (@gsaksa_en) December 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">🏆 Lazio is the champion of the #ItalianSuperCup pic.twitter.com/fg119Wv09i
— General Sports Authority (@gsaksa_en) December 22, 2019🏆 Lazio is the champion of the #ItalianSuperCup pic.twitter.com/fg119Wv09i
— General Sports Authority (@gsaksa_en) December 22, 2019
இந்த சூழலில், ஆட்டத்தின் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் யுவென்டஸ் வீரர் ராட்ரிகா பென்காடுகர் செய்த தவறால் நடுவர் அவருக்கு ரெட் கார்டும், லாசியோ அணிக்கு ஃப்ரீ கிக்கும் வழங்கினார். இதனை சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட லாசியோ வீரர் டேனிலோ அற்புதமாக கோல் அடித்து மிரட்டினார். இறுதியில் லாசியோ அணி 3-1 என்ற கோல் கணக்கில் யுவென்டஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக இத்தாலி சூப்பர் கோப்பையை வென்றது.
இதையும் படிங்க: இந்த கோல் சாதனை மெஸ்ஸிக்கு புதிதல்ல...!