ETV Bharat / sports

லாலிகா: வில்லார்ரியல் அணியை வீழ்த்தி அத்லெடிகோ மாட்ரிட் அபார வெற்றி! - அல்போன்சோ பெட்ராஸா

லாலிகா கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அத்லெடிகோ மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வில்லார்ரியல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

La Liga Round-Up: Atletico Madrid back to winning, Celta Vigo held for a draw

author img

By

Published : Mar 1, 2021, 5:32 PM IST

ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து தொடரான லாலிகா விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இன்று (மார்ச் 01) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அத்லெடிகோ மாட்ரிட் அணி, வில்லார்ரியல் அணியை எதிர்கொண்டது.

ஆட்டம் தொடங்கியதுமே இரு அணிகளும் சரிசமமான பலத்துடன் மோதின. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அத்லெடிகோ மாட்ரிட் வீரர் அல்போன்சோ பெட்ராஸா ஆட்டத்தின் 25ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் கோல் கணக்கைத் தொடக்கிவைத்தார்.

இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் அத்லெடிகோ மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து, நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் அத்லெடிகோ மாட்ரிட் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதனால் ஆட்டத்தின் 69ஆவது நிமிடம் அந்த அணியின் ஜோவா ஃபெலிக்ஸ் கோலடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். பின்னர் இறுதிவரை போராடிய வில்லார்ரியல் அணியால் எதிரணியின் டிஃபென்ஸைத் தாண்டி கோலடிக்க இயலவில்லை.

ஆட்டநேர முடிவில் அத்லெடிகோ மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வில்லார்ரியல் அணியை வீழ்த்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் லாலிகா புள்ளிப்பட்டியலில் அத்லெடிகோ மாட்ரிட் அணி 58 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

இதையும் படிங்க: டைகர் உட்ஸ் விரைவில் குணமடைய வேண்டுதல் - நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சக வீரர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.