இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்று (பிப்.10) நடைபெற்ற லீக் போட்டியில் சென்னையின் எஃப்சி அணி ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சம பலத்துடன் மோதியதால், முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளாலும் கோலடிக்க முடியவில்லை.
இதனால் முதல் பாதி ஆட்டம் கோலேதுமின்றி சமனில் முடிந்தது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் இரு அணி வீரர்களும் வலிமையான டிஃபென்ஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி, எதிரணியின் கோலடிக்கும் முயற்சிகளைத் தகர்த்தனர்.
பின்னர் ஆட்டத்தின் இறுதி நிமிடமான 90ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியின் எனெஸ் சிப்போவிக், சிறப்பாக செயல்ப்பட்டு கோலடித்தார். இதனால் அட்டநேர முடிவில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.
-
3️⃣ POINTS 💥
— Jamshedpur FC (@JamshedpurFC) February 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
We walk out victorious tonight! ⚽#CFCJFC #JamKeKhelo pic.twitter.com/pUIFdiCeF5
">3️⃣ POINTS 💥
— Jamshedpur FC (@JamshedpurFC) February 10, 2021
We walk out victorious tonight! ⚽#CFCJFC #JamKeKhelo pic.twitter.com/pUIFdiCeF53️⃣ POINTS 💥
— Jamshedpur FC (@JamshedpurFC) February 10, 2021
We walk out victorious tonight! ⚽#CFCJFC #JamKeKhelo pic.twitter.com/pUIFdiCeF5
இந்த வெற்றியின் மூலம் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி, நடப்பு சீசனின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பினைத் தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: மூன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின் வெற்றியை ருசித்த ஜோகோவிச்!