கரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் பாம்போலியத்தில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி - ஒடிசா எஃப்சி அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
நடப்பு ஐஎஸ்எல் சீசனில் கேரளா பிளாஸ்டர்ஸ் இதுவரை பங்கேற்ற 8 போட்டிகளில் ஒரு வெற்றியையும், நான்கு தோல்விகளையும், மூன்று போட்டிகளை டிராவிலும் முடித்து, புள்ளிப்பட்டியலின் 10ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
-
Persistence is the name of the game 🏋🏽#YennumYellow pic.twitter.com/MT6bGljftZ
— K e r a l a B l a s t e r s F C (@KeralaBlasters) January 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Persistence is the name of the game 🏋🏽#YennumYellow pic.twitter.com/MT6bGljftZ
— K e r a l a B l a s t e r s F C (@KeralaBlasters) January 6, 2021Persistence is the name of the game 🏋🏽#YennumYellow pic.twitter.com/MT6bGljftZ
— K e r a l a B l a s t e r s F C (@KeralaBlasters) January 6, 2021
அதேசமயம் கடந்த சீசனில் அறிமுகமாகி, மோசமான தோல்வியைச் சந்திருந்த ஒடிசா எஃப்சி அணியின் தோல்வி பயணம் இந்த சீசனிலும் தொடர்கிறது.
அதிலும் நடப்பு சீசனில் பங்கேற்ற 8 போட்டிகளில் ஒன்றில்கூட வெற்றியைப் பெறாமல், ஆறு தோல்வி, 2 டிரா என புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் இன்றைய போட்டியிலாவது வெற்றி பெருவோம் என்ற நம்பிக்கை ஒடிசா எஃப்சி அணி களமிறங்கவுள்ளது.
-
The grind never stops as we prepare for our clash against Kerala Blasters.#OdishaFC #AmaTeamAmaGame #HeroISL pic.twitter.com/2AR0rV7Huv
— Odisha FC (@OdishaFC) January 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The grind never stops as we prepare for our clash against Kerala Blasters.#OdishaFC #AmaTeamAmaGame #HeroISL pic.twitter.com/2AR0rV7Huv
— Odisha FC (@OdishaFC) January 6, 2021The grind never stops as we prepare for our clash against Kerala Blasters.#OdishaFC #AmaTeamAmaGame #HeroISL pic.twitter.com/2AR0rV7Huv
— Odisha FC (@OdishaFC) January 6, 2021
நடப்பு சீசனின் புள்ளிப்பட்டியளில் கடைசி இரு இடங்களைப் பிடித்துள்ள அணிகள் இன்றைய ஆட்டத்தில் நேருக்கு நேர் மோதவுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க:'2021-ன் முதல் ஏமாற்றம்': நடராஜன் அணியில் இடம்பெறாததால் ட்விட்டரை ஆக்ரமிக்கும் ரசிகர்கள்!