விறுவிறுப்புக்கு சற்றும் பஞ்சமின்றி இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் கலைகட்டி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சீசனில் தோல்வியையே சந்தித்திராத ஏடிகே மோகன் பாகன் அணி - இந்த சீசனில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாத ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியுடன் மோதியது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய இப்போட்டியின் தொடக்கம் முதலே ஜாம்ஷெட்பூர் அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. அதன் பயணாக ஆட்டத்தின் 30ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் நட்சத்திர வீரர் வால்ஸ்கீஸ் அசத்தலான ஒரு கோலை அடித்து அணியின் கோல் கணக்கைத் தொடக்கி வைத்தார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜாம்ஷெட்பூர் அணிக்கு ஆட்டத்தின் 66ஆவது நிமிடத்தில் வால்ஸ்கீஸ் மீண்டுமொரு கோலடித்து, அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
இதையடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏடிகே அணியின் நட்சத்திர வீரர் ராய் கிருஷ்ணா ஆட்டத்தின் 80ஆவது நிமிடத்தில் கோலடித்து, அணிக்கு நம்பிக்கையளித்தார். இருப்பினும் இறுதிவரை போராடிய ஏடிகே மோகன் பாகனால் மற்றொரு கோல் அடித்து தோல்வியிலிருந்து மீள முடியவில்லை.
-
Our first win at home! It was an important victory! 🥳🥳
— Jamshedpur FC (@JamshedpurFC) December 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Well done, lads! 🔥 🙌#JFCATKMB #JamKeKhelo pic.twitter.com/DjoWqQHncC
">Our first win at home! It was an important victory! 🥳🥳
— Jamshedpur FC (@JamshedpurFC) December 7, 2020
Well done, lads! 🔥 🙌#JFCATKMB #JamKeKhelo pic.twitter.com/DjoWqQHncCOur first win at home! It was an important victory! 🥳🥳
— Jamshedpur FC (@JamshedpurFC) December 7, 2020
Well done, lads! 🔥 🙌#JFCATKMB #JamKeKhelo pic.twitter.com/DjoWqQHncC
இதன் மூலம் ஆட்டநேர மூடிவில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஏடிகே மோகன் பாகன் அணியை வீழ்த்தியது மட்டுமல்லாமல், இத்தொடரில் தனது முதல் வெற்றியையும், அதேசமையம ஏடிகே மோகன் பாகனின் தொடர் வெற்றிக்கும் முற்றுப்புள்ளியை வைத்தது.
இதையும் படிங்க:AUS A vs IND A: கிரீன் சதத்தால் ஃபாலோ ஆனை தவிர்த்த ஆஸ்திரேலியா ஏ