ETV Bharat / sports

ஐஎஸ்எல் : முதல் வெற்றியை எதிர்நோக்கிய பயணத்தில் ஒடிசா , ஈஸ்ட் பெங்கால்!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ஒடிசா எஃப்சி அணி - ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

ISL 7: East Bengal look to revamp attack, aim first win against Odisha

author img

By

Published : Jan 3, 2021, 5:31 PM IST

கரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் திலக் மைதான் மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணி - ஒடிசா எஃப்சி அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

நடப்பு ஐஎஸ்எல் சீசனில் அறிமுகமான ஈஸ்ட் பெங்கால் அணி, இதுவரை பங்கேற்ற 8 போட்டிகளில் ஒரு வெற்றியைக்கூட பெற்றதில்லை. மாறாக நான்கு தோல்விகளையும், மூன்று போட்டிகளை டிராவிலும் முடித்து, புள்ளிப்பட்டியலின் 10ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அதேசமயம் கடந்த சீசனில் அறிமுகமாகி, மோசமான தோல்வியைச் சந்திருந்த ஒடிசா எஃப்சி அணியின் தோல்வி பயணம் இந்த சீசனிலும் தொடர்கிறது. அதிலும் 7 போட்டிகளில் ஒன்றில்கூட வெற்றியைப் பெறாமல், ஐந்து தோல்வி, 2 டிரா என புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

நடப்பு சீசனின் புள்ளிப்பட்டியளில் கடைசி இரு இடங்களைப் பிடித்துள்ள அணிகள் தங்களது முதல் வெற்றியை நோக்கி இன்றைய ஆட்டத்தில் களமிறங்கவுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:இந்தியா வீரர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டார்களா? ட்விட்டரில் பொங்கும் நெட்டிசன்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.