கோவாவில் நடைபெற்றுவரும் ஐஎஸ்எல் கால்பந்துத் தொடரின் ஏழாவது சீசன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்காக அனைத்து அணிகளும் தங்களது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றன.
இதில் நேற்று (பிப். 5) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி, பெங்களூரு எஃப்சி அணியை எதிர்கொண்டது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இப்போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் தங்களது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கினர்.
இதனால் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோலேதுமின்றி சமநிலையில் நீடித்தன. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் இரு அணியினரும் தடுப்பாட்டத்தில் (டிஃபென்ஸ்) அசத்த, கோலடிக்கும் முயற்சிகள் அனைத்தும் வீணாகின.
-
A point apiece at the Fatorda. #AllInForChennaiyin #BFCCFC pic.twitter.com/S0aZC8N4f1
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) February 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A point apiece at the Fatorda. #AllInForChennaiyin #BFCCFC pic.twitter.com/S0aZC8N4f1
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) February 5, 2021A point apiece at the Fatorda. #AllInForChennaiyin #BFCCFC pic.twitter.com/S0aZC8N4f1
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) February 5, 2021
இப்போட்டியில் வெற்றிபெறுவதற்காக இறுதிவரை போராடிய இரு அணி வீரர்களும், ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை கோலடிக்க முடியாமல் திணறினர். இதனால் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோலேதுமின்றி சமநிலையில் இருந்ததால் ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: IND vs ENG: நிதான ஆட்டம் - முதல் நாள் முடிவில் வலுவான நிலையில் இங்கிலாந்து