கரோனா பாதுகாப்புச் சூழலுடன் ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன் கோவாவில் நடைபெறுகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இருமுறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னையின் எஃப்சி அணி, அறிமுக அணியான ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. கோவாவின் திலக் மைதான் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7.30 மணிக்குத் தொடங்கவுள்ளது.
சென்னையின் எஃப்சி
நடப்பு ஐஎஸ்எல் சீசனில் சென்னையில் எஃப்சி அணி தொடக்க போட்டிகளில் சறுக்கினாலும், தற்போது மீண்டும் தனது வெற்றிப் பயணத்திற்குத் திரும்பியுள்ளது.
இந்த சீசனில் இதுவரை 6 லீக் ஆட்டங்களில் பங்கேற்றுள்ள சென்னையின் எஃப்சி அணி இரண்டு வெற்றி, இரண்டு தோல்வி, இரண்டு போட்டிகளை டிராவில் முடித்துள்ளது. இதன்மூலம் எட்டு புள்ளிகளுடன் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
-
An intense session ahead the clash with the 𝓡𝓮𝓭 & 𝓖𝓸𝓵𝓭𝓼🤛🏽#AllInForChennaiyin #SCEBCFC pic.twitter.com/SzcvQVh19m
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) December 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">An intense session ahead the clash with the 𝓡𝓮𝓭 & 𝓖𝓸𝓵𝓭𝓼🤛🏽#AllInForChennaiyin #SCEBCFC pic.twitter.com/SzcvQVh19m
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) December 25, 2020An intense session ahead the clash with the 𝓡𝓮𝓭 & 𝓖𝓸𝓵𝓭𝓼🤛🏽#AllInForChennaiyin #SCEBCFC pic.twitter.com/SzcvQVh19m
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) December 25, 2020
இனி வரும் போட்டிகளிலும் சென்னையின் எஃப்சி அணி வெற்றிபெற்று, மீண்டும் ஐஎஸ்எல் கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஈஸ்ட் பெங்கால் எஃப்சி
நடப்பு ஐஎஸ்எல் சீசனில் அறிமுகமான ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணி, தொடக்கம் முதலே படுதோல்வியைச் சந்தித்துவருகிறது. நடப்பு சீசனில் இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள ஈஸ்ட் பெங்கால், நான்கு தோல்விகளையும், இரண்டு போட்டியை டிராவிலும் முடித்துள்ளது.
இதனால் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளை மட்டுமே பெற்று பட்டியலின் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஜேஜே, வினீத், பல்வாந்த் சிங் என நட்சத்திர வீரர்கள் அணியில் இடபெற்றிருக்கும்பட்சத்திலும் ஈஸ்ட் பெங்கால் அணி தொடர் தோல்விகளைச் சந்தித்துவருவது அந்த அணி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.
-
Our boys are gearing up for the Boxing Day game against the Marina Machans at Tilak Maidan. C'mon, #TorchBearers! #ChhilamAchiThakbo #WeAreSCEB #SCEBCFC pic.twitter.com/FeJvpH5RAn
— SC East Bengal (@sc_eastbengal) December 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Our boys are gearing up for the Boxing Day game against the Marina Machans at Tilak Maidan. C'mon, #TorchBearers! #ChhilamAchiThakbo #WeAreSCEB #SCEBCFC pic.twitter.com/FeJvpH5RAn
— SC East Bengal (@sc_eastbengal) December 25, 2020Our boys are gearing up for the Boxing Day game against the Marina Machans at Tilak Maidan. C'mon, #TorchBearers! #ChhilamAchiThakbo #WeAreSCEB #SCEBCFC pic.twitter.com/FeJvpH5RAn
— SC East Bengal (@sc_eastbengal) December 25, 2020
இதனால் இனி வரும் போட்டிகளிலாவது ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்பில் அந்த அணி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க:பாக்ஸிங் டே டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் தடுமாறும் ஆஸி., அஸ்வின், பும்ரா அசத்தல்!