நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு, போக்ரஹாவில் 13ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில், போக்ரஹாவில் நேற்று நடைபெற்ற மகளிர் கால்பந்து பிரிவில் நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது முதல் ஆட்த்தில் மாலத்தீவு அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்திலேயே இந்திய வீராங்கனை தங்மெய் கிரேஸ் கோல் அடித்து அணிக்கு முன்னிலைப் பெற்றுத் தந்தார். அதன்பின், ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்திய வீராங்கனைகள் கோல் அடிப்பதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதன் பலனாக, இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை பாலா தேவி 25, 33ஆவது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார்.
இதையடுத்து, ஆட்டத்தின் 87 ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் அஷலதா தேவியின் அசிஸ்ட்டால் மனிஷா கோல் அடிக்க, அதற்கு அடுத்த நிமிடமே, ஜபாமனி துடு மிரட்டலான கோல் அடித்தார். இறுதியில், இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவை வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள மற்றொரு போட்டியில் இந்திய அணி இலங்கையுடன் மோதவுள்ளது.
இதையும் படிங்க:தெற்காசிய போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா