கால்பந்து விளையாட்டில், பீலே, மாரடோனா ஆகியோருக்கு அடுத்தபடியாக தலைசிறந்த வீரராகத் திகழ்பவர் மெஸ்ஸி என்று கூறினால் அது மிகையாகாது.
3 வயதிலே கால்பந்து ஆட்டம்
அர்ஜென்டினாவின் ரொசாரியோவில் ஜூன் 24, 1987இல் பிறந்த இவர் தனது மூன்று வயதிலேயே கால்பந்து விளையாடத் தொடங்கினார். இடது கால் (Left footed player) வீரரான இவர் சிறுவயதிலேயே பந்தைக் கட்டுப்படுத்துவது, கடத்துவது, டிஃபென்டர்களைக் கடந்து கடினமான கோல்களைக் கூட எளிதாக அடிப்பது எல்லாம் இவரது காலுக்கு வந்த கலை.
மெஸ்ஸிக்கு ஹார்மோன் குறைபாடு
13ஆவது வயதில் இவருக்கு ஹார்மோன் குறைபாடு இருந்தது தெரியவந்துள்ளது. இவரது மருத்துவச் செலவை ஏற்க ஸ்பெயினின் பார்சிலோனா அணி முன்வந்தது.இதன் காரணமாக இவர் 2000 ஆண்டில் பார்சிலோனாவின் ஜூனியர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆனார்.
15 ஆண்டுகள் சாதனை
தனது திறமையான ஆட்டத்தால், 2005இல் பார்சிலோனா சீனியர் அணியில் விளையாடும் தகுதியைப் பெற்றார்.அன்றிலிருந்து கால்பந்து விளையாட்டில் தனக்கான புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கினார். 15 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இன்னமும் இவரது மேஜிக் குறைந்தபாடில்லை
குவியும் விருதுகள்
இவர் தலா ஆறு கோல்டன் பூட், பலான் டி ஆர் விருதுகளை வென்ற ஒரே வீரர் போன்ற பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரராகத் திகழ்கிறார்.
இன்று தனது 34 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் மெஸ்ஸிக்கு, உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவின் தீம் பாடல் வெளியானது!