ETV Bharat / sports

யூரோ கால்பந்து: 13ஆவது முறையாக ஜெர்மன் அணி தேர்வு - யூரோ கால்பந்து தொடருக்கு ஜெர்மன் அணி தேர்வு

யூரோ சாம்பியன்ஷிப் கால்பந்து தொடருக்கு 13ஆவது முறையாக ஜெர்மனி அணி தகுதிபெற்றுள்ளது.

germany
author img

By

Published : Nov 17, 2019, 7:19 PM IST

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் UEFA யூரோ சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர் அடுத்தாண்டு நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இதில் பல்வேறு பிரிவுகளின்கீழ் நடத்தப்படும் போட்டிகளில் மொத்தம் 55 அணிகள் பங்கேற்றுள்ளன.

இதில் இன்று சி பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஜெர்மனி அணி பெலாரஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியின் தொடக்கத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காமல் இருந்தனர். பின்னர் முதல் பாதியின் இறுதிநேரத்தில் ஜெர்மன் வீரர் மாதியாஸ் ஜின்டர் கோல் அடித்து தங்கள் அணியை முன்னிலை பெறவைத்தார்.

பின்னர் இரண்டாவது பாதி ஆட்டத்திலும் ஜெர்மனி வீரர்கள் 49, 55, 83 ஆகிய நிமிடங்களில் கோல் அடித்ததால் அந்த அணி 4-0 என்ற கோல் கணக்கில் பெலாரஸை வீழ்த்தியது. இதன்மூலம் அந்த அணி அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் யூரோ கால்பந்து தொடருக்கு தகுதிப்பெற்றது.

ஜெர்மனி அணி கடந்த 1972ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ச்சியாக 13ஆவது முறையாக யூரோ கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. இதே சி பிரிவில் நெதர்லாந்து அணியும் தகுதி அடைந்துள்ளது.

இதையும் படிங்க: கால்பந்து: 1000ஆவது போட்டியில் 7-0 என வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி

Intro:Body:

dd

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.