இந்திய கால்பந்து அணியில் ஸ்டிரைக்கராக இருந்தவர் அபிஷேக் யாதவ். 2000ஆம் ஆண்டு முதல் இந்திய கால்பந்து அணியில் தவிர்க்க முடியா வீரராக இருந்த அபிஷேக் யாதவ், 2015ஆம் ஆண்டு கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
அதன்பின் 2018ஆம் அண்டு முதல் இந்திய கால்பந்து அணியின் இயக்குநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று அபிஷேக் யாதவ் அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஏ.ஐ.எஃப்.எஃப் -இன் தலைவர் பிரஃபூல் படேல், “இந்திய கால்பந்து அணியில் அபிஷேக் இதுவரை ஒரு பாராட்டத்தக்க வேலையைச் செய்துவந்துள்ளார். மேலும் அவர் ஒரு நிர்வாகியாக செயல்பட்டு வருவதையும் நான் தனிப்பட்ட முறையில் கவனித்தேன். அதன் காரணமாகவே அவர் தற்போது ஏ.ஐ.எஃப்.எஃப்-இன் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ரோஹித் சதமடித்து கம்பேக் தரவேண்டும்' - விவிஎஸ் லக்ஷ்மண்