கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகள் முழுவதும் ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், எட்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்நிலையில் பிரேசிலின் கால்பந்து கிளப்பான ஃபிளமெங்கோ அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸுக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று உள்ளதாகக் கண்டறிதல் சோதனையில் முடிவுகள்தெரிவித்தன. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது கண்டறிதல் சோதனையிலும் அவருக்குப் பெருந்தொற்று இருப்பதாகவே அறிவிக்கப்பட்டது.
பின் நேற்று மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது கோவிட்-19 கண்டறிதல் சோதனை முடிவுகளின்படி ஜார்ஜ் ஜீசஸுக்கு பெருந்தொற்று இல்லை என வந்துள்ளதாக ஃபிளமெங்கோ அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக நடத்தப்பட்ட இரண்டு கண்டறிதல் சோதனைகளும் தவறுதலான முடிவுகளை வெளிப்படுத்தியது எனவும் கூறியுள்ளது.
இதையும் படிங்க:பிரஞ்சு ஓபன் தொடரின் தேதி மாற்றம் சரியா? சானியா மிர்சா கேள்வி