2020-21ஆம் ஆண்டுக்கான ஐஎஸ்எல் தொடர் நவ.20ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு மற்றும் தேசிய உரிமத்திற்கான அளவுகோல்களை ஐஎஸ்எல் தொடரில் பங்கேற்கவுள்ள ஐந்து அணிகள் பூர்த்தி தவறியுள்ளது.
அதில் எஃப்சி கோவா, ஏடிகே மோகன் பகான், பெங்களூரு எஃப்சி, ஜம்ஷெத்பூர் எஃப்சி, சென்னையின் எஃப்சி, மும்பை சிட்டு எஃப்சி ஆகிய அணிகள் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய கால்ந்து கூட்டமைப்பிற்கான தேசிய உரிம அளவுகோல்களை பூர்த்தி செய்துள்ளனர். ஆனால் ஒடிசா எஃப்சி, நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி, கேரளா ப்ளாஸ்டர்ஸ், ஹைதராபாத் எஃப்சி, புதிதாக களமிறங்க உள்ள அணியான ஈஸ்ட் பெங்கால் ஆகிய அணிகளுக்கு தேசிய போட்டிகளில் பங்கேற்க ஆசிய கால்பந்து கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய கால்ந்து கூட்டமைப்பின் தேசிய உரிமங்கள் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து அகிய இந்திய கால்பந்து கூட்டமைப்பின் லீக் போட்டிகளுக்கான சிஈஒ சுனந்தோ தார் கூறுகையில், '' ஐஎஸ்எல் தொடரில் பங்கேற்க வேண்டுமென்றால் தேசிய உரிமம் பெறாத 5 அணிகளும் கூட்டமைப்பின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் அல்லது கலந்துகொள்வதற்கான அனுமதியை பெற வேண்டும்'' என்றார்.
ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் தேசிய உரிமத்தைப் பெறவில்லை என்றால் ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் மற்றும் ஏஎஃப்சி கோப்பை ஆகிய தொடர்களில் ஐஎஸ்எல் தொடரில் தகுதிப்பெற்றாலும் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பி.எஸ்.எல் ஃபைனல்: முதல்முறையாக கோப்பைய வென்ற கராச்சி கிங்ஸ்!