ETV Bharat / sports

கிளப் உலகக்கோப்பை போட்டிகளை ஒத்திவைத்த ஃபிஃபா! - யூரோ கால்பந்து தொடர்

அடுத்தாண்டு நடைபெறவுள்ள யூரோ கோப்பை, கோபா அமெரிக்க கோப்பைக்கான கால்பந்து தொடர்களை சீராக நடத்துவதற்காக, புதிதாக உருவாக்கப்பட்ட கிளப் கால்பந்து அணிகளுக்கான உலகக்கோப்பை போட்டிகளை ஒத்திவைக்க சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.

FIFA puts revamped Club World Cup on hold

author img

By

Published : Mar 19, 2020, 1:27 PM IST

கோவிட்-19 வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில் கடந்த வாரம் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா, இந்தாண்டு நடைபெறவிருந்த யூரோ கால்பந்து தொடர், கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்களை அடுத்தாண்டுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்திருந்தது.

யூரோ கால்பந்து கோப்பை
யூரோ கால்பந்து கோப்பை

இன்று நடைபெற்ற ஃபிஃபா உறுப்பினர்களின் காணொலி கலந்தாய்வில் (video conference), கோபா அமெரிக்கா, யூரோ கால்பந்து தொடர்கள் அடுத்தாண்டு ஜூன் 11ஆம் தேதி முதல் ஜூலை 21ஆம் தேதி வரை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதனால் அந்தத் தேதிகளில் நடைபெறவிருந்த ஃபிஃபா கிளப் அணிகளுக்கான உலகக்கோப்பைத் தொடரின் முதலாவது சீசனை வேறு தேதிக்கு மாற்றியமைக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ஃபிஃபா கிளப் அணிகளுக்கான கோப்பை
ஃபிஃபா கிளப் அணிகளுக்கான கோப்பை

மேலும் கோவிட்-19 வைரஸ் தொற்று தாக்கம் குறித்து கண்காணிக்க ஃபிஃபா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், கோவிட்-19 தொற்றினால் கால்பந்து விளையாட்டு மிகப்பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 வைரஸ் தொற்றின் புதிய மையமாக ஐரோப்பா மாறிவிட்டது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா வைரஸால் சென்னை சிட்டி போட்டிகள் ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.