ETV Bharat / sports

எஃப்சி கோவா அணி வீரருக்கு ஷோ கேஸ் நோட்டீஸ்!

author img

By

Published : Nov 28, 2020, 7:44 PM IST

ஐஎஸ்எல் தொடரில் மும்பை சிட்சி எஃப்சி அணிக்கெதிரான போட்டியின்போது ஆட்ட விதிகளை மீறிய எஃப்சி கோவா அணியின் ரிடீம் ட்லாங்கிற்கு இந்தியா கால்பந்து கூட்டமைப்பு ஷோ கேஸ் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

FC Goa's Redeem Tlang show-caused by AIFF

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன் நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் ஆறாவது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்சி எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் எஃப்சி கோவா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இப்போட்டியின் 40ஆவது நிமிடத்தில் எஃப்சி கோவா அணியின் ரிடீம் ட்லாங், எதிரணி வீரரைத் தாக்கும் நோக்கில் செயல்பட்டதால், போட்டி நடுவர் அவருக்கு ‘ரெட் கார்ட்’ வழங்கினார். இதையடுத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு அந்த வீரரை விசாரணைக்கு அழைத்தது.

இதையடுத்து மும்பை சிட்டி எஃப்சி அணியின் ஹெர்னன் சந்தனா, எஃப்சி கோவா அணி வீரர் மீது ஒழுங்காற்று விதிகளை மீறிய குற்றத்திற்காக கூடுதல் நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என இந்திய கால்பந்து கூட்டமைப்பிக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

பின்னர் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் ஒழுங்காற்று விதிகளை மீறிய குற்றத்திற்காக எஃப்சி கோவா அணியின் ரிடீம் ட்லாங்கிற்கு ஷோ கேஸ் நோட்டீஸை வழங்கியுள்ளது. மேலும், ரிடீம் ட்லாங்கிற்கு ஒரு போட்டியில் பங்கேற்கத் தடைவிதிப்பதாகவும் இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:2ஆவது ஒருநாள்: தொடரைத் தன்வசப்படுத்துமா இந்தியா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.