இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துத் தொடரின் ஏழாவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் நேற்று (ஜன.14) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கோவா எஃப்சி அணி - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை எதிர்கொண்டது.
போட்டி தொடங்கியது முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோவா அணிக்கு மெண்டோசாவின் மூலம் 19ஆவது நிமிடத்தில் முதல் கோல் கிடைத்தது. இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் கோவா எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் தனது அபாரத்திறனை வெளிப்படுத்திய மெண்டோசா ஆட்டத்தின் 52ஆவது நிமிடத்தில் கோவா அணிக்கு மீண்டும் ஒரு கோலை அடித்தார்.
அதைத்தொடர்ந்து ஆட்டத்தின் 89ஆவது நிமிடத்தில் கோவா அணியின் இவான் கரிடோ கோலடிக்க, கோவா எஃப்சி அணியின் வெற்றி உறுதியானது. இப்போட்டியில் இறுதி வரை போராடிய ஜாம்ஷெட்பூர் அணியால், எதிரணியின் டிஃபென்ஸைத் தாண்டி கோலடிக்க முடியாமல் போனது.
-
The Gaurs rode on @jorgeortiz92's brace and @IvanGGonzalezz's solid strike to register a resounding 3-0 win over Jamshedpur FC! 🤩
— FC Goa (@FCGoaOfficial) January 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
A performance to remember! #RiseAgain #FCGJFC #HeroISL pic.twitter.com/37uYRlH5o4
">The Gaurs rode on @jorgeortiz92's brace and @IvanGGonzalezz's solid strike to register a resounding 3-0 win over Jamshedpur FC! 🤩
— FC Goa (@FCGoaOfficial) January 14, 2021
A performance to remember! #RiseAgain #FCGJFC #HeroISL pic.twitter.com/37uYRlH5o4The Gaurs rode on @jorgeortiz92's brace and @IvanGGonzalezz's solid strike to register a resounding 3-0 win over Jamshedpur FC! 🤩
— FC Goa (@FCGoaOfficial) January 14, 2021
A performance to remember! #RiseAgain #FCGJFC #HeroISL pic.twitter.com/37uYRlH5o4
இதனால் ஆட்டநேர முடிவில் கோவா எஃப்சி அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கோவா எஃப்சி அணி ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் 18 புள்ளிகளைப் பெற்று 3ஆம் இடத்திற்கு முன்னேறியது.
இதையும் படிங்க: 'அஸ்வின் 800 விக்கெட்டுகளை கைப்பற்ற வாய்ப்புண்டு' - முத்தையா முரளிதரன்!