கோவாவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எல் கால்பந்துத் தொடரின் ஏழாவது சீசன் விறுவிறுப்புக்குப் பஞ்சமின்றி நடந்து வருகிறது. இதில் இன்று (டிச.02) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹைத்ராபாத் எஃப்சி அணி - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் வலிமையான டிஃபென்ஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், போட்டியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. பின்னர் முதல் பாதி ஆட்டநேர முடிவு வரை இரு அணியும் கோலடிக்க தவறியதால், ஆட்டம் சமனிலையில் இருந்தது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஹைத்ராபாத் அணி சந்தானா ஆட்டத்தின் 50ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹைத்ராபாத் அணி எதிரணியினரை கோலடிக்க விடாமால் தடுத்தது.
பின்னர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜாம்ஷெட்பூர் அணியின் ஸ்டீபன் ஈஸ் ஆட்டத்தின் 85ஆவது நிமிடத்தில் கோலடித்து, அணியைத் தோல்வியிலிருந்து காப்பாற்றினார். இதனால் ஆட்டநேர முடிவில் இரு அணியும் தலா ஒரு கோலை அடித்திருந்ததால், ஆட்டம் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
-
FULL-TIME! A late Eze strike cancels Aridane's 50th minute goal as it ends 1-1 at Tilak Maidan.#HFCJFC #LetsFootball #HyderabadFC 🟡⚫️ pic.twitter.com/Zp2eMhphLs
— Hyderabad FC (@HydFCOfficial) December 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">FULL-TIME! A late Eze strike cancels Aridane's 50th minute goal as it ends 1-1 at Tilak Maidan.#HFCJFC #LetsFootball #HyderabadFC 🟡⚫️ pic.twitter.com/Zp2eMhphLs
— Hyderabad FC (@HydFCOfficial) December 2, 2020FULL-TIME! A late Eze strike cancels Aridane's 50th minute goal as it ends 1-1 at Tilak Maidan.#HFCJFC #LetsFootball #HyderabadFC 🟡⚫️ pic.twitter.com/Zp2eMhphLs
— Hyderabad FC (@HydFCOfficial) December 2, 2020
ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் ஹைத்ராபாத் எஃப்சி அணி 5 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி 2 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும் நீடிக்கின்றன.
இதையும் படிங்க: ஐஎஸ்எல்: ஈஸ்ட் பெங்காலை பந்தாடியது மும்பை சிட்டி எஃப்சி!