ETV Bharat / sports

புதிய சாதனையில் தடம்பதித்த ரொனால்டோ! - சிரி ஏ கால்பந்து தொடர்

உலகின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரராக வலம்வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்வதேச அரங்கில் தனது ஆயிரமானது போட்டியில் பங்கேற்று சாதனைப் படைத்துள்ளார்.

Cristiano Ronaldo 1000: CR7 equals Serie A record on his landmark appearance

author img

By

Published : Feb 23, 2020, 9:07 PM IST

உலகின் மிகவும் பிரபலமடைந்த விளையாட்டாகக் கருதப்படும் கால்பந்தில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் தங்களது திறமைகளினால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளனர். அந்த வகையில் ரசிகர்களின் ஜாம்பவானாகத் திகழ்ந்துவருபவர் போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

இவர் உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை தனது அசத்தலான திறமையினால் பெற்றார். இதன்மூலம் கால்பந்து விளையாட்டில் தவிர்க்கமுடியாத வீரராக வலம்வரும் ரொனால்டோ, தற்போது கால்பந்து விளையாட்டில் மேலுமொரு சாதனைக்குச் சொந்தக்காராக மாறியுள்ளார்.

ஐரோப்பாவில் நடைபெற்றுவரும் கால்பந்து தொடரான சிரி ஏ தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜுவென்டஸ் அணி, ஸ்பல் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் ஜுவென்டஸ் அணிக்காக ரொனால்டோ களமிறங்கியதன் மூலம், சர்வதேச கால்பந்து போட்டியில் தனது ஆயிரமாவது போட்டியில் களமிறங்கி, போர்ச்சுகல் அணிக்காக 1000ஆவது போட்டியில் களமிறங்கிய முதல் வீரர் என்ற சாதனைப் படைத்தார்.

ஆயிரமாவது போட்டியில் கோலடித்து அசத்திய ரோனால்டோ
ஆயிரமாவது போட்டியில் கோலடித்து அசத்திய ரொனால்டோ

மேலும், இந்த ஆட்டத்தில் கோலடித்தும் அசத்தினர். இதன்மூலம் தனது 724ஆவது கோலைப் பதிவுசெய்தார். அதேசமயம் சிரி ஏ தொடரில் ஒரே ஆண்டில் 11 கோல்களை அடித்ததன் மூலம், இத்தொடரில் அதிக கோல்களை அடித்தவர்களான கேப்ரியல் ஒமர் பாடிஸ்டுரா, ஃபேபியோ குவாக்லியாரெல்லா ஆகியோருடன் இச்சாதனையைப் பகிர்ந்துகொண்டார்.

நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜுவென்டஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பல் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐஎஸ்எல் இறுதிப்போட்டி இந்தாண்டு கோவாவில் - நீடா அம்பானி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.