2027ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான அறிவிப்புகளை ஆசிய கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி இத்தொடரை நடத்தவுள்ள நாடுகளுக்கு இடையேயான ஏல அறிவிப்பு நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடைபெற்றது.
இதில் இந்தியா தரப்பில் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பிரஃபுல் படேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
குடிமக்களின் பொறுப்பு
இந்நிகழ்ச்சியின்போது பேசிய கிரண் ரிஜிஜூ, "நமது பிரதமர் மோடி விளையாட்டை மிகவும் நேசிக்கும் ஒரு நபர். அவரது தலைமையில் 'கெலோ இந்தியா' முயற்சி நாடு முழுவதும் பெரும் வெற்றியைக் கண்டுள்ளது. அதிலும் இந்த ஆசிய கோப்பை போட்டியானது மிகவும் மதிப்புமிக்க ஒன்றாகும். அதனால் இத்தொடரை இந்தியாவில் நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்.
இந்தியா ஒரு விளையாட்டு நாடாக திகழவேண்டுமானால், அதில் கால்பந்து முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று நான் எப்போதும் கூறியுள்ளேன். உலகளவில் கால்பந்து மிகவும் பிரபலமான விளையாட்டு. விளையாட்டு அமைச்சராக, எனது இலக்கு தேசத்தை ஊக்குவிப்பதாகும். இதனை குடிமக்களும் தங்களது பொறுப்பாக எண்ணி ஊக்குவிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:IND vs AUS: டெஸ்ட் தொடரிலிருந்து புக்கோவ்ஸ்கி விலகல்!